Biggboss Tamil: உள்ளே வரும் நாலு முக்கிய போட்டியாளர்கள்… ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா? செமையா இருக்கே?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் முதல் வாரத்தில் இருந்து ஏகப்பட்ட பிரச்சினையை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். ஆனால் பலருக்கு போட்டியாளர்கள் தேர்வில் பெரிய அளவில் திருப்தி இல்லை.
எப்பொழுதுமே பிக் பாஸ் சீசனில் உள்ளே வரும் போட்டியாளர்களில் ஒரு சிலர் மிகப்பெரிய பிரபலமாக இருப்பார்கள். அவர்களுக்காகவே நிகழ்ச்சியை பார்க்க வரும் ரசிகர்களும் உண்டு. ஆனால் எதிர்பார்க்காத வகையில் நிறைய மோசமான காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
எல்லா சீசன்களிலுமே காதல் கலாட்டா இருக்கும். ஆனால் இந்த முறை அது வரம்பு மீறி செல்வது போல தெரிகிறது. ஆதிரை, எஃப்ஜே மற்றும் துஷார், அரோரா ஒரு பக்கம் என்றால் எல்லை மீறும் பார்வதி மற்றும் கம்ருதீன் இன்னொரு பக்கம் வெறுப்பை சம்பாரிக்கின்றனர்.

இதனால் இந்த முறை ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ளும் பிக்பாஸ் டீம் இவர்கள் செய்யும் சித்து விளையாட்டுக்கு ஏதுவாகவே வைல்ட் கார்ட்டை திட்டமிட்டு இருக்கின்றனர். அந்த வகையில் முதல்முறையாக கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோடியாக உள்ளே வருகின்றனர்.
அதிலும் சாண்ட்ரா மற்றும் பிரஜின் கணவன், மனைவியாக உள்ளே வருகின்றனர். திருமணம் முடிந்து 19 வருடம் முடிந்துவிட்டதால் கண்டிப்பாக இவர்கள் நடவடிக்கை சரியாக இருந்தால் அது உள்ளே இருக்கும் காதல் ஜோடிக்கு சரியான பல்ப்பாக அமையும்.
அது மட்டுமல்லாமல் ஏற்கனவே ஆதிரை மகாநதி சீரியலில் நடித்தவர். அவர் எலிமினேட் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதே சீரியலில் கம்ருதீன் ஜோடியாக நடித்த திவ்யா கணேஷ் வைல்ட் கார்ட்டாக உள்ளே வருகிறார். இதனால் இன்னும் சில ரகசியங்கள் உடையலாம்.

இந்த லிஸ்ட்டில் வித்தியாசமாக உள்ளே வருபவர் அமித் பார்கவ். இவர் கன்னட பிக்பாஸ் முதல் சில சீசன்களின் பிக்பாஸ் வாய்ஸாக இருந்தவர் என்பதால் கண்டிப்பாக டிரிக்கை தெரிந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வைல்ட் கார்ட்டுக்காக ரசிகர்கள் செம ஆர்வத்துடன் உள்ளனர்.
