1. Home
  2. Bigg boss

Biggboss Tamil: விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. ஏன் இந்த வாரம் ரொம்ப முக்கியம்?

biggboss_tamil
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிக அளவிலான வார்த்தை போர் நடந்துவருகிறது. அதிலும் கேட்க முடியாத வார்த்தைகளை போட்டியாளர்கள் பயன்படுத்துவதே அதிர்ச்சியாக உள்ளது.

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் மூன்றாவது வார இறுதி எபிசோட் நாளை நடக்கவிருக்கும் நிலையில் ரசிகர்கள் தற்போது இருந்த அதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி மூன்றாவது வாரம் முடிய இருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே எக்கச்சக்கமான சண்டைகளை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அதில் எல்லாமே கண்டென்டுக்காக போடப்பட்டதாக தான் காட்சி தந்தது.

அதிலும், தேவையே இல்லாத விஷயங்களுக்காக எல்லாம் சண்டையை தொடங்கி ரசிகர்களை வெறுப்பேற்றிய சம்பவமும் நடத்தது. ஆனால் இதற்கெல்லாம் மாறாக இந்த வாரம் துவக்கத்தில் இருந்தே கொஞ்சம் விறுவிறுப்பான கண்டென்டுகள் தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. 

ஜூஸ் தயாரிக்கும் டாஸ்க் வைக்கப்பட்டு அதை பரிசோதனை செய்யும் நடுவராக பார்வதி மற்றும் திவாகர் நியமிக்கப்பட்டிருந்தனர். எப்போதும் போல இருவருமே இதை தங்களுடைய போட்டிக்காக பயன்படுத்தி கொண்டனர். இதனால் சண்டையில் எக்கச்சக்கமாக வெடித்தது. 

கிட்டத்தட்ட வீட்டிற்குள் இருந்த எல்லாருமே தங்களுடைய முகத்திரையைக் கிழித்து சண்டை போட்டு சம்பவத்தை பார்க்க முடிந்தது. அதிலும் சில போட்டியாளர்களான விக்ரம் மற்றும் பிரவீன் இந்த போட்டியை சாதுரியமாக அதிக நியாயத்துடன் விளையாடியதையும் பார்க்க முடிந்தது.

இதற்கு நேர் மாறாக இதுவரை தமிழ் பிக் பாஸ் வீடு சந்திக்காத அளவில் மோசமான வார்த்தைகளை பேசி கம்ரூதின் மற்றும் திவாகர் சண்டை போட்டுக்கொண்டு அதிர்ச்சி கொடுத்தனர். துஷாரை அடிக்க பாய்ந்தது என இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி யாரை தோலுரிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 

அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரி இருப்பதாக கூறப்படுகிறது. 9 பேர் உள்ளே வர இருக்கின்றனர். அவர்கள் எல்லாருமே இவர்கள் கேமை பார்த்து விட்டு வருவதால் இன்னும் ஆட்டம் சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் வார இறுதி எபிசோட்டுகளுக்கு இப்போதில் இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் பிரஜீன், சாண்ட்ரா ஜோடியாக இறங்க இருப்பதால் இன்னும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.