Biggboss: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறிய சீரியல் பிரபலம்!

Biggboss:பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து முக்கிய சீரியல் நடிகை ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
100 நாட்கள் ஒரே வீட்டில் 15 க்கும் அதிகமான பிரபலங்கள் 60 கேமராக்கள் முன்னால் வாழும் விஷயங்களை படமாக்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி நடந்து வருகிறது.
போன சீசன்களைப் போல இல்லாமல் இந்த முறை அறிமுகம் இல்லாத பிரபலங்களை உள்ளே இறக்கி இருக்கின்றனர். இதன் காரணமாகவே முதலில் போட்டியாளர்களிடம் பெரிய அளவில் நிகழ்ச்சிக்குள் பரபரப்பு இருக்காதோ என பேச்சுக்கள் அடிபட்டது.
ஆனால் மற்ற சீசன்களை விட இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே சண்டைகளும் சச்சரவுகளும் தொடங்கி பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இந்த வாரம் நடக்கும் ஜூஸ் டாஸ்கில் இருக்கும் எல்லா பிரபலங்களும் தங்களுடைய முகத்திரையை கிழித்து விட்டனர்.
இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் கலந்து கொண்டவர் பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா. அந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆயிஷா தன்னுடைய ஆட்டத்தை ஆட முடியாமல் பல நேரம் அழுது கொண்டிருந்ததை மட்டுமே பார்க்க முடிந்தது.
இவர் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் தெலுங்கு சீசனில் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைல்டு காடாக உள்ளே சென்றவர் உடனே தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருந்தார். முதல் சீசன் பிந்து மாதவி போல தெலுங்கில் டைட்டிலை தட்டுவார் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போது ஆயிஷாவிற்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்காக பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டிய காரணத்தால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இதை அவருடைய சமூக வலைதள கணக்குகளிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.