Biggboss Tamil 9: ஒன்றா? இரண்டா? இந்த வார பிக்பாஸ் எவிக்ஷனில் வெளியேறிய முக்கிய பிரபலம்…
Biggboss Tamil 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் மூன்றாவது எவிக்ஷனாக வெளியேறி இருக்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் உள்ளே வந்த போட்டியாளர்கள் பெரிய அளவில் பிரபலம் இல்லை என்றாலும் ரசிகர்களிடம் அதிகமாக பேசும் பொருளாக இருந்தவர்கள் என்பதால் நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே சூடு பிடித்தது.
எப்போதும் போல அதிகம் ஆடாமல் இருந்த இயக்குனர் பிரவீன் காந்தி மற்றும் திருநங்கை அப்சரா கடந்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது மூன்றாவது வாரத்தில் வார இறுதி சூட்டிங் நடந்து வருகிறது.
எப்போதும் போல இல்லாமல் இந்த வாரம் விஜய் சேதுபதி கேட்க நிறைய கேள்விகள் இருக்கிறது. உள்ளே இருந்த எல்லா போட்டியாளர்களும் தங்களுடைய முகத்திரையை கிழித்துக்கொண்டு விளையாடியது ரசிகர்களுக்கே அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.
ஆனால் மற்ற சீசன்களைப் போல இல்லாமல் போட்டியாக இதை பார்க்காமல் தனிப்பட்ட விரோதமாக கருதி தவறான வார்த்தைகளை பேசிய கம்ருதீன் மற்றும் திவாகர் செயல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதனால் இந்த வாரம் ஒரு சில போட்டியாளர்களை தவிர மற்ற அனைவரையுமே விஜய் சேதுபதி கேள்விகளால் துளைத்தெடுப்பார் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த பரபரப்பினால் எவிக்ஷன் யார் செய்யப்படுவார் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இன்னொரு பக்கம் வைல்ட் கார்ட் என்று இருப்பதால் இரண்டு பேர் வெளியேறுவார்களா என பேச்சுக்களும் அடிபட்டு வந்தது. அந்த வகையில் இந்த வாரம் சீரியல் நடிகை ஆதிரை வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் வாரத்தில் இருந்து சரியான ஆட்டத்தை விளையாடி வந்தார் அதிரை.
இவரும் இவருடைய நெருங்கிய தோழி பூர்ணிமா போல பைனல்சை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சக போட்டியாளரான எப்ஜெயுடன் இவர் காட்டிய நெருக்கம் அவருடைய வெளியேற்றத்திற்கு காரணமாக மாறி இருக்கிறது.
