Biggboss Tamil: பெண்கள் பாத்ரூம் கதவை திறந்த வாட்டர்மெலன் ஸ்டார்… வெளியேற்றப்படுகிறாரா?

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளரான திவாகர் குறித்த அதிர்ச்சி தகவலலுக்கான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்து இருக்கிறது. இதுவரை இயக்குனர் பிரவீன் காந்தி மற்றும் திருநங்கை அப்சரா இருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். தொடர்ந்து இந்த வாரம் கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் மேலும் பரபரப்பை கொடுத்திருக்கிறது.
இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் ஜூஸ் செய்து எடுத்து வர வேண்டும். அதை குவாலிட்டி செக் செய்யும் நடுவர்களாக பார்வதி மற்றும் திவாகர் இருக்க கண்டிப்பாக இந்த வாரம் பரபரப்பு இருக்கும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில் இரண்டாம் நாளான இன்று முதல் புரோமோவில் ஆதிரை மற்றும் பார்வதிக்கு இடையில் சண்டை தொடங்க அதில் கலையரசன் மேஜையை தள்ளிவிட்டு கத்தியதெல்லாம் பரபரப்பின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
இரண்டாவது புரோமோவில் திவாகர் மற்றும் பார்வதிக்கு இடையில் மிகப்பெரிய சண்டை வெடித்து அவரை திட்டிய காட்சிகளை பார்க்க முடிந்தது. இதனால் இன்றைய எபிசோடு இருக்கும் இரவு லைவிற்கும் பலரும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க நிகழ்ச்சிக்குள் ஏகப்பட்ட சச்சரவான விஷயங்களும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. எஃப்ஜே மற்றும் ஆதிரை ஒரு பக்கம் காதல் காட்சிகளை ஓட்டிக் கொண்டிருக்க, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தன் பங்குக்கு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
ஏற்கனவே கடந்த வாரம் கண்ணாடி மூலம் அரோராவிடம் முத்தம் வாங்கினார். அதைத்தொடர்ந்து பெண்களிடம் அவர் பேசும் விஷயங்களும், முத்தம் கேட்பதையும் சபரி கண்டித்து உங்கள் பெயரைக் எடுத்துக் கொள்ளாதீர்கள் என அவருக்கு அறிவுரை சொன்னதையும் எபிசோடில் பார்க்க முடிந்தது.
ஆனால் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கம்ருதீன் மற்றும் வினோத் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் பாத்ரூமில் பெண் இருந்தபோது தவறுதலாக தான் அந்த கதவை திறந்தார் எனப் பேசிக்கொள்கின்றனர். யார் இருந்தார் என்ன என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் அவர் தெரிந்து செய்திருக்க மாட்டார் என அவர்கள் பேசியிருந்ததில் திவாகர் குறித்த இந்த சர்ச்சை வீடியோ லைவில் எடிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
— Mr Attitude (@Darkblack_4508) October 22, 2025
— Mr Attitude (@Darkblack_4508) October 22, 2025
தொடர்ந்து திவாகர் இப்படி செய்து கொண்டிருப்பதால் இந்த வாரம் அவரை வெளியேற்ற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரவணன் மற்றும் பிரதீப்பை போல திவாகரையும் வெளியேற்ற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.