1. Home
  2. Bigg boss

பொண்டாட்டியை விட அன்ஷிதா முக்கியமா? அர்னவிடம் பேசுறதே இல்லை... அனுராதாவையே கடுப்பாக்கிய சம்பவம்

அர்னவ் மற்றும் அன்ஷிதா பிக்பாஸில் சம்பவம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

Arnav: நடிகர் அர்னவ் தன்னுடைய மனைவி திவ்யாவை பிரிந்ததற்கு காரணம் அன்ஷிதா மட்டுமே எனக் கூறப்படும் நிலையில் தற்போது நடிகை அனுராதாவும் இதுகுறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

சின்னத்திரை நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் செல்லம்மா சீரியல் நடிக்கும் போது அன்ஷிதாவுடன் நெருக்கமாக இருந்தார் அர்னவ்.

இது அவருக்கு மனைவிக்கு பிரச்னையாக விஷயம் வெளியில் வெடித்தது. அப்போதுதான் இருவருக்குமான வாழ்க்கையே வெளியுலகத்திற்கு வந்தது. அன்ஷிதா அதற்கு திவ்யாவிடம் பேசிய கொச்சை வார்த்தைகளும் இணையத்தில் வைரலானது.

இதில் அர்னவ் யார் பேச்சையும் கேட்காமல் இருந்து வந்தார். அவருக்கு நெருக்கமானவர்களிடமும் விலகியதாக தகவல்கள் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இதையே நடிகை அனுராதாவும் பேசி இருக்கிறார். எனக்கு அர்னவ் மற்றும் திவ்யா பிரச்னை தெரியும்.

அவர் யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. அதனால்தான் அவரிடம் இருந்து மொத்தமாக விலகிவிட்டேன். அன்ஷிதாவும், அவருக்கும் இருக்கும் உறவு குறித்து சர்ச்சை வந்த போது கூட அவர்கள் அதை விடுவதாக இல்லை. இருவரும் ஒன்றாக பிக்பாஸ் சென்றுள்ளதால் பிரச்னை வரும் என்றார்.

இந்நிலையில் அன்ஷிதா அமைதியாகி இருக்கும் நிலையில் அர்னவ் ஒன்றும் செய்யாமல் நாளை ஓட்டலாம் என பிளான் போட நேற்று வார இறுதியில் வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்து ஓவராக பேசிய அர்னவை விஜய் சேதுபதி அடக்கியதும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்கள் செல்வன் வாரிசுக்கு வாய் சரியில்லை போலயே… தேவையே இல்லாமல் பேசி வாங்கிக் கட்டிக்கிறாரே!..

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.