1. Home
  2. Bigg boss

ஒரு கோடி என்னாச்சி?!. எனக்கு ஒரு நியாயம்.. துருவுக்கு ஒரு நியாயமா?!.. பொங்கும் பாலாஜி முருகதாஸ்!...

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.

Balaji murugadas: பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். சுருக்கமாக இவரை எல்லோரும் பாலா என்றே அழைப்பார்கள். இவர் ஒரு மாடல். சென்னையில் நடந்த பல மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டவர். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

ஜிம்முக்கு போய் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பாலா பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் திமிராகவே நடந்துகொள்வார். அவரிடம் யாரேனும் சண்டை போட்டால் அடிக்க செல்வது போல உடல் மொழியை காட்டி பயமுறுத்துவார். அந்த சீசனில் கலந்துகொண்ட ஆரிக்கும் இவருக்கும் ஒத்துவரவே இல்லை.

எனவே, இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர். பாலாஜிக்கு கமல் பலமுறை அறிவுரையும் சொல்லி இருக்கிறார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனம் ஷெட்டி பங்கேற்ற ஒரு அழகிப்போட்டியை நடத்தியவர் ஒரு டூபாக்கூர் எனவும், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தே சனம் ஷெட்டி வாய்ப்பை வாங்கினார் எனவும் சொன்னார் பாலாஜி.


இதற்காக சனம் ஷெட்டி அவரிடம் சண்டையும் போட்டார். மேலும், பாலாஜி மன்னிப்பு கேட்கவில்லையெனில் அவர் மீது ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என அந்த அழகிப்போட்டியை நடத்தியவர் சொன்னார். அந்த சீசனின் இறுதிப்போட்டியாளராக ஆரியும், பாலாஜியும் நின்றனர். இறுதியில் ஆரி வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின் டிவிட்டரில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுவார் பாலாஜி. குறிப்பாக விஜய்க்கு ஆதரவாக பேசி திமுக ஆதரவாளர்களிடம் சண்டை போட்டார். உதயநிதியை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் டிவிட்டரில் ‘என் மீது ஒரு கோடி கேட்டு வழக்கு தொடர்வதாக சொன்னார்கள். அது இப்போது என்ன ஆனது?.. நான் கார் விபத்து செய்தேன் என்று பொய்யான தகவலை பரப்பி என் இமேஜை கெடுத்தார்கள்.


பணக்கார பிள்ளை துருவ் (சியான் விக்ரமின் மகன்) கார் விபத்து செய்து அதிலிருந்து தப்பினார். அதுபற்றி யாரும் பேசவில்லை. மீடியாவும் அமைதியாக இருந்தது. நான் கார் ஆக்சிடெண்ட் செய்தேன் என இப்போதும் பலர் நம்புகிறார்கள். சட்டமும், மீடியாவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கு’ என பதிவிட்டிருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.