1. Home
  2. Bigg boss

உங்க இஷ்டத்துக்கெல்லாம் இருக்க முடியாது.. முதல் நாளே ஆட்டத்தை தொடங்கிய ஜாக்குலின்..

பிக்பாஸ் ஜாக்குலின் தடாலடி ஆட்டம்

Jacqueline: பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கிவிட்ட நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் இன்று முதல் தங்கள் ஆட்டத்தை விறுவிறுப்பாக தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ஜாக்குலின் முதல் நாளே தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி இருக்கிறார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நேற்று முதல் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு விட்டது. 24 மணி நேரம் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் நிறைய விஜய் டிவி பிரபலங்கள்தான் உள்ளே சென்று இருக்கின்றனர்.

கடந்த சீசனில் நடந்த மிகப்பெரிய தோல்வியை விஜய் டிவி நிர்வாகம் மீண்டும் சரி செய்ய இந்த சீசன் தொடக்கத்திலேயே நிறைய ஆச்சரியங்களை வைத்திருக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சி தொடங்கி 24 மணி நேரத்தில் முதல் எலிமினேஷன் நடக்க இருப்பதாக விஜய் சேதுபதி நேற்று அறிவித்திருந்தார்.

அந்த வகையில் மகாராஜா படத்தில் நடித்த சச்சனா முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இவர் சீக்ரெட் ரூம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எலிமினேஷன் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். அவர் உண்மையில் எலிமினேட் செய்யப்பட்டால் அவருக்கு வைல்ட் கார்டு அவசியமாக கொடுக்கப்பட வேண்டும் எனவும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. சொகுசாக இருக்கும் வீட்டை பெண்கள் அணியுடன் நாமினேஷனில் டீல் பேசி ஆண்கள் அணி விட்டுக் கொடுத்திருக்கிறது. ஆனால் கடைசி போட்டியாளராக உள்ளே வந்த ஜாக்லின் இருக்கு இது விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று பெட்டில் படுக்காமல் தரையில் படுத்திருக்கிறார்.

மேலும் முதல் நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் எனக்கு இந்த டீலில் விருப்பமில்லை. எனக்கு தோன்றியவர்களை தான் நான் நாமினேட் செய்தேன். அதற்காகத்தான் இங்கு வந்திருப்பதாக காரசாரமாக தீபக் மற்றும் ரவீந்தருடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்களும் முதல் நாளே காட்டமா இருக்கே என கலாய்த்து வருகின்றனர்.


கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.