1. Home
  2. Bigg boss

Biggboss: அல்ப விஷயத்துக்காக செல்லத்தை அழுக விட்டீங்களே… ஸ்ருதிகா அர்ஜூனுக்காக பொங்கும் ரசிகர்கள்

இந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா அர்ஜூனின் சேட்டை வைரலான நிலையில் தற்போது அவர் அழுவதை ரசிகர்கள் கவலையில் பார்த்து வருகின்றனர்.

Biggboss: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவிலான ஆதரவை பெறாத நிலையில் தற்போது இந்தி பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரிய அளவில் டிரெண்ட்டாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஸ்ருதிகா அர்ஜூன் என்பதால் அவருடைய செயல்களும் வைரலாகி வருகிறது.

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா அர்ஜூன். இவர் தமிழில் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ஆனால் எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் தோல்வியில் அமைந்தது. இதனால் சில வருடங்களில் சினிமாவை விட்டே விலகினார்.

அதை தொடர்ந்து படிப்பிலும், தன்னுடைய தொழிலும் கவனம் செலுத்தி வந்தார். அதில் வெற்றி கண்டவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கலாட்டாவாக அவர் பேசுவதும், சிரிப்பதுமே ஸ்ருதிகாவிற்கான ஒரு இடத்தை ரசிகர்களிடம் தக்க வைத்தது.

அந்த சீசன் நிகழ்ச்சியில் வெற்றியாளராகவும் மாறினார். இதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் வரும் ஸ்ருதிகாவின் சேட்டைகள் ரசிகர்களை ரசிக்கும்படியாக அமைந்தது. தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

முதல் நாளில் இருந்தே அவர் பேசுவது மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தன்னுடைய மாநிலத்தால் தான் இந்தி பேசுவது ஒரு மாதிரி இருப்பதாக சக போட்டியாளர் நக்கல் செய்வதை தைரியமாக சொல்லி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்நிலையில் தைரியமாக இருந்த ஸ்ருதிகா தற்போது நிகழ்ச்சியில் கதறி அழுது இருக்கிறார். அதுகுறித்து அவருடைய ஆண் போட்டியாளர் கேட்க எனக்கு நேற்று சாப்பாடே இல்லை. பாதி சோறுதான் கிடைத்தது. என்னுடைய பால் காப்பி எனக்கு இல்லை. காபியே இல்லாமல் இருப்பது என்னை கோபப்படுத்துகிறது. பிளாக் காபியாவது கொடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

சமீபத்தில் ஒரு வீடியோவில் பிளாக் காபி எல்லாம் காபி இல்லை. பால், காபி, சீனி என கலந்து குபுகுபுவென வந்தால்தான் காபி என பேசிய ஸ்ருதிகாவையே இன்று பிளாக் காபி கேட்க வைத்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் தற்போது ஸ்ருதிகாவை ஏன்பா அழுக வைக்கிறீங்க எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.