1. Home
  2. Bigg boss

Biggboss Tamil 8: இந்த வாரம் 'டபுள் எவிக்ஷன்' இருக்காம்?


Biggboss Tamil: நிகழ்ச்சியின் டிஆர்பியினை தக்க வைத்திட பிக்பாஸ் படாதபாடு பாடுகிறார். பிக்பாஸ் ஆரம்பித்து 5 வாரங்கள் முடிந்துள்ளன. இன்னும் வீட்டுக்குள் ஒரு காதல் பூ பூக்கவில்லை. கடந்த ஏழு சீசன்களாக காதல் கோட்டைகளால் கட்டி எழுப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அப்பா-மகள், அண்ணன்-தங்கை பாசம் எல்லாம் உருவாகிறதே தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்தவொரு காதல் பயிரையும் காணவில்லை.

இதுக்கு மேல் அது பூப்பதற்கு வாய்ப்பும் இல்லை. போட்டியாளர்கள் எல்லாம் உஷார் ஆகி விட்டார்களா? இல்லை எதுக்கு நமக்கு வம்பு என இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. நிலைமை இப்படியே போனால் பிக்பாஸ் தலையில் துண்டை போட்டுக்கொள்ள வேண்டியது தான். இதனால் எப்படியாச்சும் இந்த நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்கணும் என்று பிக்பாஸ் தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம்.

எனவே இந்த வாரம் இரண்டு பேரை வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. நம்ம சொல்றதுக்கு முன்னால எல்லாருக்கும் வெளிய போற ஆளு யாருன்னு தெரிஞ்சிருது என்று கடுப்பாகி தான் கடந்த வாரம் வெளியேறுவதற்கு தயாராக மூட்டை முடிச்சுகளுடன் இருந்த அன்ஷிதாவை நீ கொஞ்சம் இருமா என்று தக்க வைத்தார். எனவே இந்த வாரம் நிச்சயமாக இரண்டு பேர் எவிக்ட் ஆகலாம் என தெரிகிறது. தற்போது வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 21.


இதில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் 11 பேர். ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, சாச்சனா, முத்துக்குமரன், அருண், ரஞ்சித், தீபக், விஜே விஷால், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் வீட்டைவிட்டு வெளியேற போவது ஆண்களா? இல்லை பெண்களா? என்று தெரியவில்லை. ஒருவேளை ஆண், பெண் என சரிசமமாக இருவரை வெளியேற்ற பிக்பாஸ் திட்டமிட்டு இருக்கிறாரா? என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.