1. Home
  2. Bigg boss

Biggboss Tamil: கமல் கட்டம் கட்டுவார்!... விஜய் சேதுபதி வேற லெவல்!.. பாராட்டும் பிக்பாஸ் ரசிகர்கள்!...

பிக்பாஸ் போட்டியாளர்களை டீல் பண்ணும் விஷயத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதிக்கு இருக்கும் என்ன வித்தியாசம் என பார்ப்போம்.

Biggboss Tamil: ஒவ்வொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் இருப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழை பொறுத்தவரை இப்போது 8வது சீசனை எட்டியிருக்கிறது.

7 சீசன்களை கமல் நடத்திய நிலையில் 8வது சீசனில் விஜய் சேதுபதி வந்திருக்கிறார். எனவே, கமலை போல விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சரியாக நடத்துவாரா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், முதல் வாரத்திலேயே என்னால் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்து காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

kamal

kamal

முதல் நாள் போட்டியாளார்களை அறிமுகம் செய்து பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பும்போதும் சரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர்களை பேச விடாமல் மடக்கியதிலும் சரி.. விஜய் சேதுபதி ஸ்கோர் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை போட்டியாளர்களை கமல் நடத்திய விதத்தை பார்த்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவர்கள் விஜய் சேதுபதி டீலிங்கில் கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்கள் என்றே சொல்லலாம்.

கமல் ஒருவரை கட்டம் செய்ய முடிவு செய்துவிட்டால் சிலந்தி வலை பின்னுவது போல கொஞ்சம் கொஞ்சமாக அவரை தன் வட்டத்திற்குள் கொண்டு வருவார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி நையாண்டியான கிண்டல்கள் அதில் இருக்கும். டார்கெட் சரியாக சிக்கியவுடன் ஒரே போடுதான். வலிக்காமல் ஊசி போடுவதில் கமல் ஒரு சிறந்த டாக்டர் என எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் வார இதழ் ஒன்றில் எழுதியிருக்கிறார்.


விஜய் சேதுபதி பற்றி அவர் சொல்லும்போது ‘விஜய் சேதுபதியின் பாணி வேறு மாதிரி இருக்கிறது. வார்த்தை அலங்காரங்கள் இல்லை.. சுற்றி வளைத்து பேசுவதில்லை.. தப்பு செய்தால் முகத்திற்கு நேராக ‘நீங்கள் இதை செய்தீர்களா?’ என கேட்டுவிடுகிறார். போட்டியாளர் நழுவ முயன்றால் மெஷின்கன் கேள்விகளால் லாஜிக்காக மடக்குகிறார். ‘எந்த பக்கம் போனாலும் கேட்டை போட்டால் எப்படி?’ என போட்டியாளர்களை திகைக்க வைக்கிறார்’ என சொல்லி இருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.