1. Home
  2. Bigg boss

திவாகருக்கும் வினோத்துக்கும் இப்படியொரு கெமிஸ்ட்ரி இருக்கா? பார்த்ததும் சிரிப்பீங்க

diwakar
லவ் டிரேக்க விட இது வேற மாதிரி இருக்கே.. திவாகரும் வினோத்தும் கெமிஸ்ட்ரி தாங்க முடியல

இதென்ன பிக்பாஸ் வீடா இல்ல கெஸ்ட் ஹவுஸா என்பது போல இருக்கிறது பிக்பாஸ் 9 சீசன். இதுவரை நடந்த எட்டு சீசன்களும் மக்கள் மத்தியில் பாசிட்டிவான ரெஸ்பான்ஸையே பெற்று வந்திருக்கின்றன. ஆனால் இந்த சீசன் சுவாரஸ்யமே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. யார் யாரையோ அழைத்து வந்து போட்டியாளர்கள் என சொல்லி பிக்பாஸ் நிகழ்ச்சியையே கேவலப்படுத்தி வருகிறார்கள் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சோசியல் மீடியாக்களில் பிரபலமானவர்களை பிக்பாஸ் போட்டியாளர்களாக்கி கடுப்பேற்றி வருவதாகவும் தொடர்ந்து ரசிகர்கள் கூறி கொண்டு வருகின்றனர். சோசியல் மீடியாக்களில் எந்த மாதிரி கண்டெண்ட் கொடுத்தவர் அரோரா என எல்லாருக்கும் தெரியும். அவரெல்லாம் எதுக்கு பிக்பாஸில் அனுமதித்தார்கள் என்பது பலரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் அரோரா, ஆதிரை, துஷார், எஃப்ஜே ஆகியோர் போடும் அட்ராசிட்டியை தாங்கவே முடியவில்லை. குறிப்பாக அரோரா மற்றும் துஷார் இந்த வீட்டை அவர்கள் சுய நலத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் இந்த சீசனுக்கு ஏகப்பட்ட பேர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் திவாகர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சீரியஸாகவே விளையாடிக் கொண்டு வருகிறார் திவாகர்.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. ஒரு சில பேருக்கு கெமிஸ்ட்ரி செட் ஆகிவிட்டது என்றால் அவர்களுக்குள் இருக்கும் உறவு சுமூகமாக போய்க் கொண்டிருக்கும். அது காதலாக இருந்தாலும் சரி நட்பாக இருந்தாலும் சரி. இரு தரப்புக்கும் நல்ல ஒரு உறவு இருந்தால்தான் கடைசி வரை நீடிக்கும். அப்படி திவாகருக்கும் சக போட்டியாளரான வினோத்துக்கும் எப்படிப்பட்ட கெமிஸ்ட்ரி போய்க் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வீடியோதான் அது.

திவாகர் வாயை திறந்தாலே வினோத்து.. வினோத்து என்றுதான் கூப்பிடுகிறார். அது யாராக இருந்தாலும் சரி. அவர்களை வினோத்து என்றுதான் அழைக்கிறார். இது ஒரு கட்டத்தில் வினோத்துக்கே கடுப்பாகிவிட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாலும் என் பேரைத்தான் சொல்வீயா?  நாமினேஷனிலும் என் பேருதான் முதலில் சொல்ற? இது பாசத்துல சொல்றீயா? அல்லது எதுக்கு சொல்றனு தெரியல என கடுப்பாகி பேசுகிறார் வினோத். கடைசியில் ஒரு ட்விஸ்ட் வச்சாரு பாருங்க நம்ம திவாகர். 

இந்த வீடியோவை பாருங்க: