போற போக்க பார்த்தா திவாகருக்கு ரெட் கார்டு விழும் போலயே! இந்த வீடியோவ பாருங்க
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. எட்டு சீசன்களாக நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி இப்போது ஒன்பதாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுவரை இல்லாத அளவு இந்த சீசனில் போட்டியாளர்கள் என்ற பெயரில் யார் யாரையோ அழைத்து வந்து ஷோவை நடத்துகிறார்கள்.
இன்ஸ்டாவில் கண்டெண்ட் என்ற பெயரில் கண்டதையும் காட்டியவர்களையும் போட்டியாளராக உள்ளே இழுத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வீட்டிற்குள் வந்து என்ன செய்ய போகிறார்கள் என்று விமர்சனத்தை வைத்துக் கொண்டே இருந்தார்கள். போன வார எவிக்ஷனில் ஆதிரை வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஹய்யோ அப்பா போயிட்டார் என்றுதான் அனைவரும் பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
ஏனெனில் ஆதிரை பேசும் வார்த்தையை காதால் கேட்க முடியாது. டபுள் மீனிங் என்ற பெயரில் கேட்கக் கூடாத வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நடவடிக்கைகளும் முகம் சுழிக்கும் வகையில்தான் அமைந்தது. இதில் கம்ருதினுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என்றும் சில பேர் கேட்டுக் கொண்டே இருந்தனர். ஏனெனில் உள்ளேஎ பெண்களிடம் அவர் பழகும் முறை ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கிறதா என்று விமர்சித்தார்கள்.
இதையெல்லாம் தாண்டி திவாகர் செய்கிற காரியத்தை பார்த்தால் இவர எதுக்கு உள்ளே வச்சிருக்கீங்க என்றுதான் அனைவரும் கேட்போம். ஒரு ரியாலிட்டி ஷோ என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய நிகழ்ச்சி. நல்லதையே பேச வேண்டும். நாம் செய்கிற ஒரு செயல்தான் அதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு உதாரணமாக இருக்கும்.
ஆனால் திவாகர் பண்றதை பார்த்தால் நம்பவே முடியவில்லை. இதுவரை தங்கை தங்கை என அழைத்து வந்த பார்வதியை திருமணம் செய்து கொள்ளட்டுமா என்று கேட்கிறார். அரோராவிடம் ப்ரோபஸ் பண்ணுவது போல் அவர் கண்ணை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்க்கிறார். அதற்கு அரோரா ‘என் கண்ணு இங்க இருக்கு’ என சொல்லிவிட்டு நழுவுகிறார்.
பார்வதி வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் படுக்கையறையில் அவர் தோளில் சாய முயற்சிக்கிறார். இதெல்லாம் பற்றி ஏன் விஜய் சேதுபதி விசாரிக்கவில்லை என்பதுதான் பலரின் கருத்தாக பார்க்கப்படுகிறது.
That creepy unkil in your circle 🤡#Diwagar #BiggBossTamil9 #BiggBossTamil pic.twitter.com/1AAzuI2qpF
— Deepu (@deepu_drops) October 26, 2025
