Biggboss Tamil 9: பிக்பாஸையே கடுப்பேத்திட்டாங்க.. சாண்டி மாஸ்டரை நினைச்சு ஃபீல் பண்ண பிக்பாஸ்
பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு விஷயம் நடக்க போகிறது. அது சம்பந்தமான புரோமோதான் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் 9வது சீசனில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வாரம் பிரவீன் எவிக்ஷன் ஆகி வெளியேற்றப்பட்டார். இது யாருமே எதிர்பாராத ஒரு திருப்பமாக அமைந்தது.
அதுவும் ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். துஷாருடன் இணைந்து பிரவீனும் எவிக்ட் ஆகி வெளியேற்றப்படார். இது பல பேருக்கு அதிர்ச்சியை தந்தது. ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் சரியான பங்களிப்பைத்தான் கொடுத்து வந்தார் பிரவீன். இருந்தாலும் வாக்குகளின் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டார். அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களால் பிக்பாஸே கடுப்பாகி போயிருக்கிறார். இந்த வாரம் அரண்மனை டாஸ்க் நடந்து வருகிறது. கானா வினோத் ஒரு குரூப்பும் வாட்டர்மெலன் திவாகர் ஒரு குரூப்புமாக பிரிந்து இந்த டாஸ்க்கை விளையாடி வருகிறார்கள். ஆனால் முழுவதும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் பிக்பாஸ் கடுப்பாகி விட்டார்.
அதற்கு வினோத் காமெடியாவே கொண்டு போகலாம்னு கத்திக்கிட்டே இருக்கிறேன். ஆனால் முடியலனு சொல்றாரு. அதற்கு பிக்பாஸ் ‘அங்கேயே நீங்க காலி. கத்தலும் நகைச்சுவயும் எப்படியும் ஒன்னா போகும்? உங்ககிட்ட நல்ல சர்காசம் இருக்கு, என் சிஷ்யனோட ஃபிரண்ட்தானே நீங்க.என் சிஷ்யன் என்னைக்காவது சண்டை போட்டு பார்த்திருக்கிறீர்களா?ஆனால் சிரிப்பை மட்டும் வரவழைக்க தவறியதில்லை. அதுதான் விஷயம்’ என சொல்கிறார்.
அதனால் இந்த முறை நானும் உங்களுடன் சேர்ந்து விளையாட போகிறேன். என் குரல் மட்டும் உங்களுடன் விளையாடும். இதுவரை இப்படி நடந்ததே இல்லை. உங்களுக்கு ஒரு சப்போர்ட் வேண்டும் என பிக்பாஸ் கடுப்பில் சொல்கிறார். அந்த புரோமோ வீடியோதான் வெளியாகியிருக்கிறது.
Bigg Boss'ah ye kadupethitanga 😱
— JioHotstar Tamil (@JioHotstartam) November 12, 2025
Bigg Boss Tamil Season 9 - இப்போது 24x7 ஒளிபரப்பாகிறது JioHotstar-ல் #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #24*7Live #24x7StreamingNow #JioHotStarTamil #JioHotstar pic.twitter.com/Q7TQYLjsvW
