1. Home
  2. Bigg boss

Biggboss Tamil 9: அடுத்த ஜூலியாக மாறிய கம்ரூதின்… யோசிச்சுதான் பேசுறீங்களா?

kamruddin_julie
கம்ரூதின் ஏற்கனவே கெட்ட பெயரில் இருக்கிறார். அவரின் சீரியலில் நடித்த ஆதிரை வெளியேறி இருக்க இவரின் ஜோடியாக நடித்த திவ்யா கணேஷ் வைல்ட் கார்ட்டாக உள்ளே வர இருக்கிறார். இதனால் இன்னும் சுவாரஸ்யம் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

Biggbos Tamil 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அடுத்த ஒரு காமெடி சம்பவம் நடந்து இருக்கிறது. 

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது மூன்றாவது வாரத்தில் இருக்கிறது. முதல் இரண்டு வாரத்தை விட இந்த வாரம் போட்டியாளர்கள் கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொண்டார்கள். இதை இந்த வார இறுதி எபிசோட் ஆன நேற்று விஜய் சேதுபதி கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வைல்ட் கார்ட் எண்ட்ரி உள்ளே வர இருக்கின்றனர். தற்போதைய தகவலின் படி பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகரான பிரஜின், அவர் மனைவி சாண்ட்ரா, விஜய் டிவி நடிகர் அமித், நடிகை திவ்யா கணேஷ், நடிகர் சிபு சூரியன் என பலரும் உள்ளே வர இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோவில், கம்ரூதினுக்கு அடுத்து ஒரு வரலாறு சம்பவம் நடந்துள்ளது. முரட்டுத்தனமான கோபத்தால் அவர் பேசும் வார்த்தைகள் ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு அவர் மீதான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

நேற்றைய எபிசோடில் வெள்ளிக்கிழமை நிகழ்வில் காட்டும்போது பெண் போட்டியாளர்கள் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகருடன் இருப்பதற்கு பாதுகாப்பாக உணரவில்லை என பேசி இருப்பார். ஆனால் உடனே சுபிக்ஷா அப்படி எதுவும் இல்லை நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன் என தன்னுடைய வாதத்தை முன் வைத்தார்.

இது குறித்த இன்றைய புரோமோவில் விஜய் சேதுபதி இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது சுபிக்‌ஷா என்னை பற்றி சொன்னார் என கம்ரூதின் சொல்லுவார். ஆனால் சுபிக்‌ஷா சொல்லி இருப்பதே வீடியோவில் இருப்பதாக குறிப்பிடுகிறார். 

இதற்கு கம்ரூதின் சத்தியமாக நான் சொல்லியதாக கூற விஜய் சேதுபதியும் சத்தியமாக வீடியோவில் இல்லை என கலாய்த்து இருக்கிறார். முதல் சீசனில் இதே போல ஓவியா தன்னிடம் காயத்ரி குறித்து அஞ்சு செகண்ட் முன்னாடி சொன்னதாக சொல்லி இருப்பார். 

ஆனால் கமல் அப்படி இல்லை என கூறிய வீடியோ இணையத்தில் மிகப்பெரிய வைரல் ஆனது. இந்நிலையில் ஜூலியை தொடர்ந்து கம்ரூதினை அடுத்த ஜூலி என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். தேவைத்தான இதெல்லாம். வீடியோவை வச்சிக்கிட்டு இப்படி சமாளிக்கிறீங்களே என ரசிகர்கள் கமெண்ட்டை பறக்க விடுகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.