1. Home
  2. Bigg boss

Biggboss Tamil: கம்ரூதின் முன்னாள் காதலி இந்த சீரியல் பிரபலமா? இருந்தாலும் இந்த திமிர் ஆகாது!

kamrudin
பிரிந்துவிட்ட காதலியை குறித்து சொல்லும் போது அவர் பெயரை குறிப்பிடாமல் இப்படி ஓபனாக பேசினால் தனக்கு பிரச்னை என்பதை கூட புரியாமல் செய்வது எப்படி சரியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தங்களுடைய கதைகள் குறித்து போட்டியாளர்கள் சொல்லி வந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் கம்ரூதின் தன்னுடைய கதையை சொல்லி இருந்த பழைய காதலி குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கியதில் இருந்தே ஒரே சண்டை, பரபரப்பு என பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசி வருகின்றனர். 

அந்த வகையில் நேற்று கம்ரூதின் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசினார். பொதுவாக இதுவரை எந்த ஒரு போட்டியாளர் வாழ்க்கை கதையும் விமர்சிக்கப்பட்டதே இல்லை. ஆனால் இப்போது கம்ரூதின் விதிவிலக்காக மாறி இருக்கிறார். 

அதிலும் தன்னுடைய காதலி குறித்து அவர் சொல்லிய விதமும் உடல்மொழியும் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டிற்குள் இருந்த ஆதிரை கூட இதெல்லாம் தேவையா என்ற தொணியில் உடல் சைகை செய்ததையும் பார்க்க முடிந்தது. kamrudin_pratibha

என்னுடைய காதலியை பிரேக் அப் செஞ்சிட்டேன். ஆனா இப்போ என ஏளனமாக கை தட்டிய விதம் பிக்பாஸுக்குள் தான் வந்துவிட்டதை குறித்து அவர் பேசி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கம்ரூதின் தன் சீரியலின் முதல் ஜோடியை விரும்பியதாக தெரிவித்து இருந்தார். 

கம்ரூதின் மகாநதி சீரியலில் குமரன் என்ற கேரக்டரில் அடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கங்கா கேரக்டரில் முதலில் நடித்தவர் பிரதீபா. இவர் சில மாதங்களிலேயே சீரியலில் இருந்து வெளியேறினார். அப்போது காரணம் எதுவும் கூறப்படவில்லை. தற்போது பார்க்கும் போது இவர்கள் காதல் முறிவே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

ஏற்கனவே கம்ரூதின் வந்ததில் இருந்தே திமிராக பேசிய விஷயங்கள் விவாதமாக மாறியது. இந்த வாரம் மட்டுமே அமைதியாக இருந்து ட்ரோல்களை குறைத்தார். தற்போது மீண்டும் இப்படி பேசி நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரையாளர்கள்