BB Tamil 9: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்! என்னய்யா நடக்குது?
ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் ஒவ்வொருத்தராக வெளியே வருவார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் இரண்டு போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டு இருக்கின்றனர். தற்போது ஒன்பதாவது சீசனில் பயணித்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களாக நல்ல வரவேற்பை பெற்று வந்தது .
எட்டாவது சீசன்ம் மக்களுக்கு பெரிய அளவில் பிடிக்காமல் இருந்தது .அதைவிட ஒன்பதாவது சீசன் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என்ற ஒரு விவாதமே நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த ஒன்பதாவது சீசனை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இந்த சீசனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என கூறிக் கொண்டே வருகிறார். இதுவரை இல்லாத அளவு இந்த சீசனில் கெட்ட வார்த்தைகள் சகஜமாக புழக்கத்தில் இருக்கின்றன. போட்டியாளர்களின் நடவடிக்கைகளும் மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. இது எதையுமே விஜய் சேதுபதி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதைப் பற்றி அவர் பேசுவதே இல்லை என்றும் விஜய் சேதுபதி மீது கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
18 + கண்டெண்டை மட்டுமே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றனர். அதனால் இந்த நிகழ்ச்சி தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாக கூறி பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து துஷார் மற்றும் பிரவீன் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ரம்யா, சுபி, திவாகர், கானா வினோத் ,கனி, சாண்ட்ரா, வியானா என ஒன்பது போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் யார் குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிற விவரம் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் ரம்யாவிற்கு தான் ஓட்டின் அடிப்படையில் கடைசி இடம் கிடைத்திருந்தது .ஆனால் விஜய் சேதுபதியிடம் திட்டு வாங்கிய பிறகு அவருடைய கேம் நன்றாக மாறி இருக்கிறது.
இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருந்தால் ஒரு வேளை ரம்யா மற்றும் சுபி ஆகியோர் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி யாரும் எதிர்பாராத விதமாக கனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
