1. Home
  2. Bigg boss

பார்வதியிடம் புரோபோஸ் செய்தாரா கம்ரூதின்… எதுக்குங்க ஒரு வாரம் டைமு! குழப்பத்தில் ரசிகர்கள்…

kamrudin_parvathy
ஏற்கனவே பார்வதி தன்னுடைய ஸ்ட்ராடஜியால் ஒரு இடம் பிடித்து இருக்கும் நிலையில் லவ் ரூட் பிடித்தால் சீக்கிரம் வெளியேற தான் வாய்ப்பு. 

Biggboss Tamil9: தமிழ் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி நடந்து கொண்டு இருக்கும் நிலையில் போட்டியில் இன்னொரு காதல் ஜோடி இணைந்து இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. எப்போதும் போல இல்லாமல் இந்த முறை அறிமுகம் இல்லாத நட்சத்திரங்களும், சமூக வலைத்தள பிரபலங்களுமே அதிகம் உள்ளே வந்து இருக்கின்றனர். 

புது போட்டியாளர்கள் என்பதால் முதலில் ரசிகர்கள் சரியில்லை எனக் கூறினாலும் இரண்டு வாரங்களை கடந்து தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தியும், நேற்று திருநங்கை அப்சராவும் எலிமினேட் செய்யப்பட்டனர். 

இது ஒரு புறமிருக்க தொடங்கிய இரண்டே வாரத்தில் நிகழ்ச்சிக்குள் இரண்டு காதல் ஜோடிகள் இருக்கின்றனர். ஒரு பக்கம் அரோரா மற்றும் துஷார் ஜோடியாக இருக்க இன்னொரு புறமோ அதிரா மற்றும் எஃப்ஜே இருவரும் கைப்பிடித்து வலம் வரும் காட்சிகளை பார்த்து விளையாட வந்தீங்களா டேட்டிங் வந்தீங்களா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் பார்வதி நேற்று இரவு நீங்க பாட்டும் போவீங்க. அப்புறம் திரும்பி யூ டர்ன் போட்டு வந்தா நான் அழைச்சு மரியாதை கொடுக்கணுமா? எனக்கு ஒரு வாரம் டைம் வேணும் உன்னை அலசி ஆராய்ஞ்சிட்டு சொல்றேன் எனப் பேசி இருப்பார். இந்த வீடியோ வைரலானது. 

ஒருவேளை கடந்த வாரமே பார்வதியை தன்னுடைய முன்னாள் காதலி போல இருப்பதாக கம்ரூதின் பேசி இருந்தார். அதன் பின்னர் பார்வதி கம்ரூதினிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதும் அதிகரித்தது. இதனால் பார்வதியிடம் காதலை சொல்லி இருப்பாரோ என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் அந்த விஷயம் காதலை சொல்லியதற்காக ஒன்றாக விளையாட முடிவெடுத்த டீம் பிளானுக்காக என்றே கூறப்படுகிறது. இரண்டு வாரம் முடிக்கவில்லை. அதற்குள் இத்தனை காதல் ஜோடிகளா தாங்க முடியாதுப்பா எனக் கலாய்த்து வருகின்றனர். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.