சோசியல் மீடியாவுல செக் பண்ண பிறகுதான் தெரிஞ்சுச்சு.. அரோராவுக்கு அரோகரா போட்ட பிரவீன்காந்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக எலிமினேட் ஆகி வெளியே வந்திருக்கிறார் இயக்குனரும் நடிகருமான பிரவீன் காந்தி. அவர்தான் தான் ஒரு நடிகர் என்று பல பேட்டிகளில் கூறி வருகிறார். போன ஒருவாரத்திலேயே வெளியே வந்தது பற்றியும் அங்குள்ள போட்டியாளர்கள் குறித்தும் பிரவீன் காந்தி அவருடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். வெளியே வந்ததும் விஜய் சேதுபதியையே திணறடித்தார். நான் ஒரு ஸ்பேஸ் எங்கும் இருப்பேன், எதிலும் இருப்பேன் என விஜய் சேதுபதியை குழப்பிவிட்டுத்தான் வந்தார்.
அதுவும் மகள் வயதில் இருக்கும் அரோராவுடன் காதல் கண்டெண்ட் விளையாடலாமா என்று கேட்டு ஆடியன்ஸுக்கு ஷாக் கொடுத்தார். இதை பற்றி விளக்கமாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். காதல் கண்டெண்ட் கொடுத்தது உண்மைதான். ஆனால் அந்த பொண்ணு யாருனு வெளியே வந்த பிறகுதான் எனக்கே தெரியும் என்று கூறினார். ஆனால் நானும் அரோராவும் இதை பற்றி முதலில் பேசிவிட்டுத்தான் காதல் கண்டெண்டை பற்றி பேசிக் கொண்டிருந்ததாக பிரவீன் காந்தி கூறினார்.
அதாவது பிரவீன் காந்தி ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வருகிறாராம். அந்த பெண் வெறுக்கும் அளவுக்கு அரோரா பிரவீன் காந்தியை காதலிக்க வேண்டுமாம். அப்போ கல்யாணம் செய்வீர்களா? என்று அரோரா கேட்டாராம். அதற்கு பிரவீன் காந்தி லவ் மட்டும்தான் என சொல்லியிருக்கிறார். அரோராவை பொறுத்தவரைக்கும் காதல் செய்து கல்யாணம் குழந்தை என போக வேண்டுமாம். இதெல்லாம் ஒரு ப்ளேதான் என பிரவீன் காந்தி கூறினார்.
ஆனால் கடைசியில் பார்த்தால் அரோரா வீட்டில் உள்ள எல்லார்கிட்டயும் இப்படித்தான் பண்ணிட்டு இருக்கு என கூறினார். குறிப்பாக துஷார் உடன் ஓவரா போகுது என கூறினார். யாரை வேண்டுமானாலும் நம்பலாம். இந்த பாரு-வ மட்டும் நம்பக் கூடாது. எல்லாரையும் குழி தோண்டி புதைக்கிற கேரக்டர்தான் பார்வதி. திவாகருடன் சேர்ந்ததே திவாகரின் ஃபாலோயர்ஸ்களை தனதாக்கிக் கொள்ளத்தான் பார்வதி திவாகருடனேயே இருக்கிறார் என்றும் பிரவீன் காந்தி கூறினார்.
ஆனால் திவாகருக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை. ஏனெனில் அவ்ளோ பெரிய தொப்பையை காட்டிக் கொண்டுதான் திரிகிறார். உலகமே பார்க்கிற ஒரு ஷோ. இப்படி இருக்கலாமா என்றும் பேசியிருக்கிறார் பிரவின் காந்தி. நிகழ்ச்சியை பொறுத்தவரைக்கும் துஷார் டைட்டிலை அடிக்க வாய்ப்பிருக்கிறது. கனியை பொறுத்தவரைக்கும் ஏன் உள்ளே வந்தாங்கனே தெரியவில்லை என சக போட்டியாளர்கள் குறித்து அவருடைய விமர்சனத்தை கூறினார் பிரவீன் காந்தி.