Biggboss Tamil 9: விஜய்சேதுபதியாலதான் டென்ஷனே! பிக்பாஸே அவர்தான்.. முகத்திரையை கிழித்த பிரவீன்காந்தி

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கண்டெண்ட்டுகளை கொடுக்க தயாராகி விட்டனர் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள். 8 சீசன்களை பார்த்து பழகிய போட்டியாளர்கள் என்னென்ன செய்தால் மக்களை ரீச் பண்ணலாம் என்ற தெளிவோடுதான் உள்ளே வந்திருக்கிறார்கள். பிக்பாஸ் என்றாலே மோதல், காதல், சண்டை இது இருந்தால் போதும். மக்களை எளிதாக ரீச் பண்ணலாம்.
இதைத்தான் பிக்பாஸ் ரசிகர்களும் விரும்புகிறார்கள். வெறுமனே டையலாக், அன்றாட வாழ்க்கையை பார்த்து ரசிகர்களும் வெறுத்து போய்விடுவார்கள். குறிப்பாக இந்த சீசனில் யார் யாருக்கு காதல் மலர போகிறது என்றுதான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர் பிரவீன் காந்தி இதை முன்பே உணர்ந்ததினால் காதல் கண்டெண்ட் கொடுக்கலாம் என அரோராவை அணுகினார்.
ஆனால் முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டு பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். வெளியே வந்ததும் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது? எப்படி இருந்தது என்பதை பற்றி பல சேனல்களில் கூறி வருகிறார் பிரவீன் காந்தி. அரோராவுடன் காதல் கண்டெண்ட் கொடுக்க முயற்சித்ததைத்தான் அனைவரும் விமர்சித்தார்கள். ஏனெனில் மகள் வயதில் இருக்கும் அரோராவுடன் எப்படி இந்த மாதிரி அப்ரோச் செய்தார் என்றுதான் அனைவரும் கேள்வி எழுப்பினர்.
ஆனால் இப்படி செய்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும் என்று நினைத்துதான் செய்தேன் என்று பிரவீன் காந்தி கூறினார். மேலும் விஜய் சேதுபதி குறித்தும் அவருடைய காட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரவீன் காந்தி. சினிமாவில் விஜய்சேதுபதிக்கு நான் சீனியர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரைக்கும் அவர்தான் எனக்கு சீனியர். அதனால் விஜய்சேதுபதியிடம் எப்படி பேசுவது என்பதிலேயே கொஞ்சம் டென்ஷன்.
இருந்தாலும் விஜய்சேதுபதி எந்த போட்டியாளர்களையும் பேசவிடமாட்டார். ஒரு கருத்து சொல்ல போகிறோம் என்றால் உடனே உட்காருங்க அல்லது நோஸ் கட் செய்து அமர வைத்துவிடுகிறார். அவர் பிஸியான செட்யூலில் இருக்கலாம். இருந்தாலும் போட்டியாளர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.அவர்தான் பிக்பாஸ் போல நினைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா போட்டியாளர்களையும் அவருடைய ஆளுமைக்குள் கொண்டு வர பார்க்கிறார்.
எனக்கு மட்டும் இல்லை. உள்ளே இருக்கும் 19 போட்டியாளர்களையும் விஜய்சேதுபதி இப்படித்தான் செய்கிறார். அதனால் போட்டியாளர்களையும் கொஞ்சம் பேச விடுங்க விஜய்சேதுபதி சார் என பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.