Biggboss Tamil: கம்ருதீன் என்னை தப்பா தொடுறாரு? பகீர் குற்றச்சாட்டை வைக்கும் பார்வதி!
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோவில் திவாகருடன் பார்வதி பேசிக்கொண்டிருக்கும் விஷயங்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் அதில் அவர் சொல்லியிருக்கும் தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி மூன்று வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில் நான்காவது வாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வாரத்தின் டாஸ்காக போட்டியாளர்களின் துணி முதல் அவர்களுடைய ஆபரணங்கள் என எல்லாமும் பிக் பாஸ் அணியால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதை அவர்கள் மீண்டும் பெற கொடுக்கப்படும் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற வேண்டும். அதனால் அவர்களுடைய உடமைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு யூனிபார்ம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த போட்டி நேற்று இரவு தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டது. அதில் திவாகருடன் பார்வதி பேசிக்கொண்டிருக்கிறார். கம்ருதீன் ஒரு வேலையை செய்து விட்டான். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை டேட் செய்வது போல் அவன் நடந்து கொள்கிறான்.
அவனுடைய தொடுதல் எனக்கு தப்பாக தெரிகிறது. நான் டேட்டிங் செய்தால் அதற்கான வரைமுறைகளை வகுத்துக் கொள்வேன். இவனுடைய விஷயம் சரியாக இல்லை. அவன் எனக்கு தோழன் நான் அவனுக்கு தோழி என்ற கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என கூறிவிட்டதாக தெரிவிக்கிறார்.
தற்போது இந்த புரோமோ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரமாக பார்வதிக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது கம்ருதீன் தான். ஆனால் அவரை இப்படி திடீரென பார்வதி குற்றச்சாட்டுடன் பேசுவது பார்ப்பவர்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த விஷயத்தை கம்ருதீனிடம் சொல்லப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதை உள்ளே வரும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் சொல்லினால் ஆட்டத்தில் சூடு பிடிக்கும். வார இறுதியில் விஜய் சேதுபதி இது குறித்து கேட்டால் கண்டிப்பாக ரெட்கார்டு கொடுக்கும் அளவு கூட செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
