1. Home
  2. Bigg boss

Biggboss Tamil: சண்டைக்கு இருந்த மரியாதையே போச்சு... இப்படியா இறங்குவீங்க பார்வதி…

vj_parvathy
பார்வதி தொடர்ந்து சண்டையை தன்னுடைய குறிக்கோளாக வைத்திருக்கும் நிலையில் உள்ளே வரும் வைல்ட் கார்ட் இதை கேள்வி கேட்டால் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கலாம்.

Biggboss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்றாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்த நிலையில் அதைத்தொடர்ந்து விஜே பார்வதி  நடந்து கொண்ட விதம் ரசிகர்களிடம் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி  மூன்று வாரங்கள் முடிந்து நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. நேற்றைய வார இறுதி எபிசோட் பார்வதி மற்றும் கம்ருதீனை விஜய் சேதுபதி கடுமையாக சாடியிருந்தார். அதைத்தொடர்ந்து இவர்களுடைய ஆட்டத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதைப்போலவே இன்றைய நாளின் துவக்கத்தில் சக போட்டியாளரான துஷாரை அழைத்து கம்ருதீன் தன்னுடைய விளக்கத்தை கொடுத்து அவருடன் சமாதான பேச்சுவார்த்தையே முடித்துக் கொண்டார். அதேபோல பார்வதியும் தன்னுடைய ஆட்டத்தில் மாற்றத்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சண்டை போடுவதை மட்டுமே தன்னுடைய ஸ்டேடர்ஜியாக பயன்படுத்தும் பார்வதி மாறமாட்டார் என்பதற்கு அடுத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இந்த வார தல டாஸ்க்கில், பிரவீன்ராஜ், விக்ரம் மற்றும் கனி திரு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அதில் பிரவீன் வெற்றி பெற்று இந்த வார தல பொறுப்பை ஏற்று இருக்கிறார்.

அவர் டீமை பிரித்து தன்னுடைய விதிகளை சொல்லிக் கொண்டிருக்கும்போது தொடர்ந்து பார்வதி கேட்ட கேள்விகளை பார்த்து ரசிகர்கள் மற்றவர்களை பேசவிடாமல் பார்வதி இப்படி செய்வது சலிப்பை தான் ஏற்படுத்துவதாக தெரிவித்து வருகின்றனர்.

சரியாக வேலை செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுப்பதாக அவர் சொன்ன போது அதற்கான முழு விளக்கத்தையும் உடனே சொல்லுமாறு பார்வதி தொடர்ந்து அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தார். இதற்கு காரணமும் பார்வதி இந்த வாரமும் பல பிரச்சினைகளை செய்ய இருப்பதாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக காலையிலிருந்து வெளியான 2 ப்ரோமோக்களிலும் கனிவுடன் பார்வதி தொடங்கி இருக்கும் சண்டை குறித்த நிகழ்வே இடம்பெற்று இருக்கிறது. இதற்கு முன் போட்டியாளரான வனிதா எல்லா பிரச்சினைகளிலும் தேவையில்லாமல் ஒரு சண்டையை உருவாக்கி கன்டென்ட் கொடுப்பார்.

தற்போது அதே விஷயத்தை கையில் எடுத்திருக்கும் பார்வதி இன்னும் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பார் என்பது தெரியவில்லை. இருந்தும் விஜய் சேதுபதி கூட இவர் வேலை செய்யவில்லை. மற்றவர்கள் பேச்சைக் கேட்கவில்லை என சொல்லிக் கூட தன் போக்கை மாற்றிக் கொள்ளாதது ரசிகர்களிடம் அவர் மீது இன்னும் எதிர்மறை விமர்சனங்களை  அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.