1. Home
  2. Bigg boss

BB Tamil 9: விஜே பார்வதிக்கு குவியும் பாராட்டுக்கள்.. திடீரென டிரெண்டாகும் பாரு.. vjsக்காக வெயிட்டிங்

parvathy
பார்வதியின் இந்த சகிப்புத்தன்மை பலத்த பாராட்டை பெற்றிருக்கிறது.

VJ Parvathy:

இன்று சோசியல் மீடியாவில் விஜே பார்வதியின் செயல் பாராட்டை பெற்று வருகிறது. அதன் மூலம் ரெண்டிங் ஆகி வருகிறார். பிக்பாஸ் சீசன் 9ல் அனைத்துப் போட்டியாளர்களையும் ஒரே ஆளாக எதிர்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் vj பார்வதி. ஆரம்பத்தில் இவர் மீது ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். ஏனெனில் அந்த அளவுக்கு அவருடைய பேச்சு நடவடிக்கை எல்லாம் அமைந்திருந்தது.

ஆனால் திவாகர் வீட்டை விட்டு வெளியே போன பிறகு தனியாக பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்களை நல்ல முறையில் பின்பற்றி விளையாடி வருகிறார். ஆனால் கம்ருதீனுடனான அவருடைய அந்த நெருக்கம் பார்க்கும் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இருந்தாலும் இன்று சோசியல் மீடியா பக்கத்தை திறந்தாலே விஜய் பார்வதியை பற்றி தான் செய்திகள் இருக்கின்றன.

ஓய்வில் எஃப்ஜே:

அப்படி என்ன நடந்தது என்றால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஒரு கண்டிப்பான வார்டனாக பார்வதி நடித்து வருகிறார். அந்த கேரக்டர் பெயர் வசந்தி. மூன்று நாட்களாக இந்த டாஸ்க் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த மூன்று நாளில் சமையல், சுத்தம் செய்தல், மற்றும் பாத்திரம் கழுவுதல் ஆகியவற்றை ஒரே  நாளாக பார்வதியே கையாண்டு வருகிறார். அவருக்கு உதவியாளராக FJ  இருந்த நிலையில் திடீரென அவருக்கு காயம் அடைந்து ஓய்வில் இருந்தார்.

parvathy

மற்ற போட்டியாளர்கள் எந்தவித உதவியும் செய்யாமல் இருக்க அதைப் பற்றி எல்லாம் பார்வதி கண்டு கொள்ளாமல் இரவு முழுக்க அதிகாலை 4 மணி வரை அவர் சமையல் அறையை சுத்தம் செய்தல் பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்து வருகிறார். இருந்தாலும் விக்ரம் போன்ற போட்டியாளர்களிடமிருந்து விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார் பார்வதி.

விஜய்சேதுபதிக்காக வெயிட்டிங்:

சில சமயம் அவரை கேலியும் செய்து வருகின்றனர். இதற்கு முன் அவர் நடத்திய நாடகங்களை சுட்டிக்காட்டி பார்வதியை கிண்டல் செய்து வருகின்றனர். இருந்தாலும் பார்வதியின் இந்த அர்ப்பணிப்பு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. விஜய் சேதுபதியின் வார இறுதி நிகழ்ச்சிக்காக பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.  பார்வதியின் இந்த சகிப்புத்தன்மை பலத்த பாராட்டை பெற்றிருக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.