Biggboss Tamil: பார்வதிக்கே விபூதி அடித்த சுபிக்ஷா… இதான் கர்மா இஸ் பூமராங்கா?
Biggboss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார ஜூஸ் டாஸ்க் நடந்த கோளாறுகளில் போட்டியாளர் பார்வதிக்கு சுபிக்ஷா அடித்திருக்கும் விபூதி தான் தற்போதைய பேசு பொருளாக மாறியிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில் மூன்றாவது வாரத்தின் துவக்கத்தில் போட்டியாளர்களுக்கு ஜூஸ் தயாரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர்கள் கொடுக்கப்படும் பொருளை வைத்து ஜூஸ் தயாரிக்க வேண்டும்.
அதை நடுவர்களாக இருக்கும் பார்வதி மற்றும் திவாகர் இருவரும் பரிசோதனை செய்து ஒப்புதல் கொடுக்கப்பட வேண்டும். இதில் ஜூஸ் கடை உரிமையாளராக இருந்தார் சுபிக்ஷா. அவருக்கு பாட்டில் சப்ளை செய்யும் தொழிலாளர் கூட்டத்தில் வியானா, விக்ரம் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த போட்டியில் வெல்லும் போட்டியாளர்களுக்கு டீலக்ஸ் ரூம் செல்லும் வாய்ப்பும், நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் பாஸும் கிடைக்கும். இதற்காக போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே ஒரு தனி அக்ரீமெண்ட் போட்டுக்கொண்டு விளையாடினர்.
அந்த வகையில் பார்வதி தன்னுடைய அக்ரீமெண்ட்டை ஒவ்வொரு நாளும் ஒருவரிடம் போட்டு தற்போது பல்பு வாங்கி இருக்கிறார். முதல் நாள் ரம்யாவிடம் அவருக்கு சுமூகமாக செய்தால் பாஸ் கொடுக்க வேண்டும் என பேரம் பேசி இருந்தார்.
Boom! Twist served 🔥#Subhiksha on fire 😌🔥🔥🔥#VJParvathy Parvathy face = buffering 😂
— S P (@_thecurious1) October 23, 2025
Next: crying scenes 🧻with drama and attitude🤣🤣🥳🥳🥳 #BiggBossTamil9 #BiggBoss9Tamil
pic.twitter.com/wIkx2noCO8
அடுத்த நாள் சுபிக்ஷாவிடம் அதேபோல் பேச ஆனால் அவரோ ஏற்கனவே விக்ரம், வியானாவுக்கு வெற்றி பெற உதவி செய்தால் பாஸ் கொடுக்கிறேன் எனக் கூறி இருந்தார். இதனால் தற்போது சுபிக்ஷாவை எல்லாரும் கட்டம் கட்டிவிட்டனர்.
இதில் கனி சாமர்த்தியமாக இவர் எல்லாருக்குமே இதே வாக்குறுதி கொடுத்து இருப்பதால் தான் பேசிய காயினை மட்டுமே வாங்கிக்கொண்டார். சுபிக்ஷாவின் திட்டத்தை கேட்ட பார்வதியே ஷாக்காகிவிட்டார் எனக் கூறப்படுகிறது.
போட்டி தொடங்கியதில் இருந்தே பார்வதி தனக்கென ஒரு ஆட்டத்தை ஆடி வருகிறார். சத்தமே இல்லாமல் சுபிக்ஷா அவருக்கு விபூதி அடித்திருக்கும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கொடுத்த வாக்கை மாற்றி பேசுவதாக இருந்தாலும் எல்லாருமே இங்கு விளையாட தானே வந்திருக்கிறார்கள். அப்போ சுபிக்ஷாவின் இந்த டிரிக் சரி தான் என்று பேசப்படுகிறது.
