Watermelon Diwakar: விஜய் மாதிரியே என்னையும் ட்ரீட் பண்ணாங்க.. திவாகர் இன்னும் அடங்கலயே
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு பல யூடியூப் சேனல்கள் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை ரவுண்ட் கட்டி பேட்டி எடுத்து வருகின்றனர். திவாகரும் சளைக்காமல் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்தவண்ணம் இருக்கிறார். அவரை பொறுத்தவரைக்கும் மீடியா எப்பொழுதும் தன் பக்கமே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுபவர். அதனால் லைம் லைட்டில் இருக்கவே ஆசைப்படுகிறார் திவாகர்.
இந்த நிலையில் ஒரு பட விழாவிற்கு சென்றிருந்த திவாகரை கார்னர் செய்து மீடியாக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி சில கேள்விகளை கேட்டனர். அதற்கும் திவாகர் அவருடைய அனுபவங்களை கூறியுள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டில் எல்லாம் ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்று வெளியில் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. உள்ளே போய்விட்டால் எங்களை அடைத்துவிடுவார்கள்.
முழுக்க முழுக்க அங்கு நடந்தது அனைத்துமே உண்மை. நிறைய ரிவியூவர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். உள்ளே சாப்பாட்டுக்கு தட்டுப்பாடு, விளையாட்டுக்கு தட்டுப்பாடு, அவர்கள் சொன்ன டாஸ்க்கை செய்து கொண்டே இருக்கிறோம். ஸ்கூலில் கூட ஜாலியாக இருக்கும். ஆனால் பிக்பாஸில் அப்படி இல்லை. அதோடு நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். பலதரப்பட்ட குண நலன்கள் கொண்ட மனிதர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கும்.
வீட்டு வேலை எதுவுமே தெரியாது. ஆனால் சுடுதண்ணீர் போட கற்றுக் கொண்டேன். காய்கறி வெட்ட கற்றுக் கொண்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பிக்பாஸ் என்பது ஸ்கிரிப்டே கிடையாது. அங்கு நடக்கும் அனைத்தும் உண்மையே. நான் வெளியே வந்ததும் நிறைய குழந்தைகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். நடிப்பு அரக்கன் என்பது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வைரலாகியது.

ஃபேமிலி ஆடியன்ஸை முழுவதும் கேட்ச் பண்ணிவிட்டேன். செல்லப்பிள்ளையாகவே வைத்திருக்கிறார்கள். வைல்ட் கார்டில் உள்ளே போக வேண்டும் என நிறைய பேர் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த மதுரை மீனாட்சி தாய் அருளால் அது நடந்தாலும் சந்தோஷம்தான். விஜய்சேதுபதி சார் ரூடா நடந்துக்கிட்டாருனு ஒரு கருத்து இருக்கு. ஆனால் அப்படி எதுவுமே கிடையாது. பாரபட்சமே இல்லாமல்தான் அனைவரிடமும் நடந்துக்கிட்டாரு.
சமீபத்தில் விஜய் சாருக்கு கிஸ் பண்ண மாதிரியே எனக்கும் விஜய்சேதுபதி சார் கிஸ் பண்ணாரு. அது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாச்சு. கண்டிப்பாக அவர் புரடக்ஷனில் ஒரு ஹீரோவாகவோ அல்லது என்ன கேரக்டர் கொடுத்தாலும் நான் நடிப்பேன் என்றும் திவாகர் கூறியுள்ளார்.
