
Bigg Boss
Biggboss 9: முதல் நாளே பல்பு வாங்கிய வாட்டர் மிலன் திவாகர்!.. அசிங்கமா போச்சு குமாரு!….
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் ஏற்கனவே 8 சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. முதல் 7 சீசனை கமல்ஹாசன் நடத்தினார். 8வது சீசனை விஜய் சேதுபதி நடத்தினார். கமல் அளவுக்கு விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நடத்தவில்லை என்கிற விமர்சனமும் வந்தது. நான் என் ஸ்டைலில் பண்ணுகிறேன் என விளக்கம் கொடுத்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ம் தேதியான இன்று துவங்கியுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதியே நடத்துகிறார். இந்த முறை விஜே பார்வதி, வாட்டர் மிலன் திவாகர், ஸ்டேண்டப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், விஜே ஷோபனா, மாலினி ஜீவரத்னம், வியனா, ஜனனி அசோக்குமார், ரோஷன், ரம்யா ஜூ உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக களமிறங்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அதோடு, மனைவியை பிரிந்து பரபரப்பை ஏற்படுத்திய அகோரி கலையரசனும் கலந்துகொள்ளப்போவதாக அப்டேட் வெளியானது. தற்போது போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி துவங்கிவிட்டது. முதல் போட்டியாளராக வாட்டர் மிலன் திவாகரை விஜய் சேதுபதி அறிமுகம் செய்யப்பட்டார். இவர் சிவாஜியை போல நடிப்பேன் என சொல்லி எல்லோரையும் டார்ச்சர் செய்தவர் இவர். ரிப்போர்ட் அடித்து இவரின் இன்ஸ்டாகிராம் பக்கமே முடக்கப்பட்டது.

அதோடு, தற்போது பிரபலமாகவுள்ள பல நடிகர்களையும் நக்கலடித்து பேசி ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார் திவாகர். எனவே, இவரை பல யுடியூப் சேனல்களும் பேட்டிக்கு அழைத்து அவரை நக்கலாக பேச கோபத்தில் பாதி பேட்டிகளில் எழுந்து போனார். இந்நிலையில்தான் தற்போது பிக்பாஸ் சீசன் 9-ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக விஜய் சேதுபதி இவரை மேடைக்கு அழைத்தபோது பார்வையாளர்களை பார்த்து கை அசைத்தார். ஆனால், பார்வையாளர்கள் யாரும் கைத்தட்டவில்லை. இதனால் ‘கை தட்டுங்க பாவம்’ என விஜய் சேதுபதி சொல்ல அதன்பின் பார்வையாளர்கள் கை தட்டினார்கள்.