Biggboss Tamil: காயத்ரி, வனிதாவை அசிங்கப்படுத்திய நெட்டிசன்கள்… பார்வதியை விட்டு வைப்பது ஏன்?
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுகள் நடந்து வரும் இடையில் நெட்டிசன்கள் காட்டும் பாரபட்சம் குறித்த ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரே வீட்டில் 16க்கும் அதிகமான பிரபலங்கள் 100 நாட்களுக்கும் அதிகமாக வருவது கேமராக்கள் முன்னால் வாழ வேண்டும். அவர்களுக்கு வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் நடக்கும் நிகழ்வே 100 நாட்கள் ஒளிபரப்பப்படும்.
இந்த நிகழ்ச்சியை மற்ற மொழிகளில் மிகப் பிரபலமாக இருந்து வந்தது. 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக பிக் பாஸ் சீசன் 1 தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்வு பலரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
வீட்டிற்குள் வந்த அனைவருமே அப்போது தமிழ் சினிமாவில் மிகத் தெரிந்த முகமாக இருந்தனர். அப்படி வந்த பிரபலங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை ஓவியா தனக்கான மிகப்பெரிய கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் அதை அவர் தக்க வைத்துக் கொள்ளவில்லை.
அதேபோல் எதிர்மறையான விமர்சனங்களை குறித்து பிரபல நடிகை மற்றும் நடன இயக்குனரான காயத்ரி ரகுராம், நடிகை நமீதா, நடிகர் சக்தி, பொது வெளியில் இருந்து உள்ளே வந்த ஜூலி உள்ளிட்டோர் தங்களுடைய இமேஜை மொத்தமாக எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
அந்த சீசன்களில் எல்லாம் ஓவராக சண்டை போடும் போட்டியாளர்களை ரசிகர்கள் பெரிய அளவில் விரும்பாமல் தவிர்த்து வந்தனர். அதேபோல மூன்றாவது சீசனில் வந்த வனிதாவை கூட ரசிகர்கள் பெரிய அளவில் விரும்பவில்லை.
கிட்டத்தட்ட சீசன் 9-ல் இருக்கும் பார்வதி போல எதற்கெடுத்தாலும் சண்டையை தொடங்கியது வனிதா தான். ஆனால் அவரை நாமினேஷனில் வந்த முதல் தடவையே தூக்கிவிட்டனர். ஆனால் தற்போது ரசிகர்கள் இப்படி நெகட்டிவ் விமர்சனங்கள் உள்ள போட்டியாளர்களை தான் அதிகம் விரும்புகின்றனர்.
நிகழ்ச்சிக்குள் பாசமழை காட்டி விளையாடுவது வெறுப்பாகி விட்ட நிலையில் அடித்து சண்டை போடும் பிரபலங்களையே தக்க வைக்க விரும்புகின்றனர். அந்தவகையில் தான் எதற்கெடுத்தாலும் வீண் வம்பு பேசும் பார்வதி இன்றளவும் நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து வருகிறார். ஆனால் இவருக்கு டைட்டில் கிடைக்க கண்டிப்பாக வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
