என் மகளுக்காக கேட்ட விஷயம்.. பிரதீப் இப்படி பண்ணுவாருனு நினைக்கல! மன உளைச்சலில் ஐஷுவின் தந்தை

by Rohini |
aish
X

aish

Pradeep Antony: விஜய் டிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் விஜே அர்ச்சனா டைட்டில் வின்னராக தேந்தெடுக்கப்பட்டார். மணிச்சந்திரா இரண்டாவது இடத்தை பிடித்தார். அதற்கு அடுத்தபடியாக மாயா மூன்றாவது இடத்தில் இருந்தார். ஆனால் இந்த சீசன் ஆரம்பமான முதற்கொண்டு மக்கள் நெஞ்சங்களை மிகவும் கவர்ந்தவர் பிரதீப் ஆண்டனி.

ஆனால் ஒட்டுமொத்த பெண் போட்டியாளர்கள் சேர்ந்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். இல்லையெனில் பிரதீப் ஒரு வேளை டைட்டில் வின்னராவதற்கு தகுதியுடையவராக இருந்திருப்பார்

இதையும் படிங்க: கொலவெறி பாட்டுதான் படத்தையே காலி பண்ணிச்சி!. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆதங்கம்!…

இந்த நிலையில் சக போட்டியாளரான ஐஸுவின் அப்பா சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது ஐஸு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என துடித்தது அவர்தானாம். இந்த ப்ளாட்பார்ம் வேண்டாம் என்றும் எந்தளவு ஐஸுவிடம் நெகட்டிவாக சொல்லி தடுக்க முடியுமோ தடுத்து பார்த்தாராம்.

ஆனால் ஐஸு ஒரேடியாக நான் போகத்தான் போகிறேன் என்று பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். அதுவரை எந்த நெகட்டிவ் கமெண்ட்களையும் பார்த்திராத அவரது குடும்பம் ஐஸு பிக்பாஸ் வீட்டிற்குள் போனதும் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்களை பார்க்க நேர்ந்தாராம். இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கிடையில் ஐஸு , நிக்‌ஷன் விவகாரமும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இதையும் படிங்க: சண்டை போட்டு கொள்ளும் முத்து, ஸ்ருதி… ரூமுக்குள் செட்டிலான விஜயா… மீண்டும் பழைய கதையா?…

அதன் பிறகு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிரதீப் உள்ளே செல்ல இருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டு ஐஸுவின் தந்தை பிரதீப்பிற்கு போன் செய்து ‘என் மகளை ஒரு safe zoneல் இருக்க வையுங்கள்’ என்று கூறினாராம். அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்தை மிகவும் பர்சனலாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் ஒரு சில காரணங்களால் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. ஆனால் இதை அப்படியே பிரதீப் சோசியல் மீடியாவில் பகிர இது மேலும் ஐஸுவின் அப்பாவிற்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்திருக்கிறது. இதுசம்பந்தமாக மோசமான கமெண்ட்களை தான் சந்திக்க நேர்ந்தது என அவர் கூறினார்.

Next Story