Connect with us
ameer

Biggboss Tamil 7

ஐஸுவை பொளந்து கட்டும் அமீர்.. உள்ள போய் இருக்கு! இனிமேதான் கேம் வேற லெவல்ல இருக்க போகுது

BiggBoss Season 7: ரசிகர்களின் ஆர்வத்தையும் வெறுப்பையும் சம அளவில் சந்தித்துக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன்.  நாளுக்கு  நாள் இந்த புள்ளிங்கோவின் ஆட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஒரு அளவே இல்லையா? என்று முகம் சுழிக்கும் அளவில் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது.

நேற்று நடந்த கமெண்ட் செக்‌ஷனில் கூட புள்ளிங்கோ பேசிய இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருந்தன. ஆனால் அதை நாங்கள் சும்மா வேடிக்கையாகத்தான் சொன்னோம் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. இதே பிரதீப்பும் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

இதையும் படிங்க: எல்லா பழியையும் கமல் மேல் திருப்பிய பூர்ணிமா!.. அப்போ அப்படி பேசியதெல்லாம் பொய்யா கோபால்!..

ஆண் ஆதிக்கம் அதிகமா? பெண் ஆதிக்கம் அதிகமா? என்ற அடிப்படையில் இந்த சீசன் போய்க் கொண்டிருக்கிறது. அதை பற்றியும் ஒரு கமெண்ட்  ‘இந்த சீசனில் ஆண்கள் எல்லாம் வேஸ்ட்’ என்று சொல்வது நியாயமானதாக இருக்கிறதா? இதைப் பற்றி கண்டிப்பாக கமல் கேட்க வேண்டும்.

இந்த நிலையில் கடந்த சீசனில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளர்களாக இருந்தவர்கள் அமீர் மற்றும் பாவ்னி. இதில் அமீர் தற்போதைய போட்டியாளராக இருக்கும் ஐஸுவின் வீட்டில்தான் தங்கி வளர்ந்தவர். ஆனால் இப்போது ஐஸுவின் வீட்டிற்கும் அமீருக்கும் ஏதோ பிரச்சினை என்றும் அமீர் அவர்களுடன் இப்போது பேசுவது இல்லை என்றும் ஒரு கருத்து பரவலாக போய்க் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: பெட்ரூமில் அப்படியொரு போஸ்!.. தாறுமாறு பண்ணும் தங்கலான் நடிகை.. ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!..

ஐஸுவும் நிக்‌ஷனையும் பற்றி நிரூபர் கேட்ட கேள்விக்கு மறைமுகமாக பதில் சொன்னார் அமீர்.அதாவது நான் 50 நாள் கழித்துதான் வைல்டு கார்ட் போட்டியாளராக உள்ளே போனேன். அங்கு போனதும் பாவ்னியை காதலித்தேன். உயிருக்கு உயிராக காதலித்தேன்,

பின் வெளியே வந்தும் இப்போதும் காதலிக்கிறேன், இன்னும் கொஞ்ச நாள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறோம். இதிலிருந்தே உங்களுக்கு பதில் தெரிஞ்சிருக்கும் என நம்புகிறேன். நாங்களும் கண்டண்டுக்காக லவ் பண்ணியிருந்தால் இதே பெயர்தான் எங்களுக்கும் கிடைத்திருக்கும் என்று அமீர் கூறினார்.

இதையும் படிங்க: இந்திய சினிமாவிலேயே தங்கத்தட்டில் சாப்பிட்ட ஒரே நடிகர்! ஆனால் கடைசி காலத்தில் அவரின் பரிதாப நிலை

அப்போ ஐஸுவும் நிக்‌ஷனும் கண்டண்டுக்காக லவ் பண்ணுகிறார்கள் என்பதைப் போல பேசினார். ஒரு வேளை நான் கெஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் போனால் ‘வெளியே பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மக்கள் ஒரு பட்டப் பெயரை வைத்திருக்கிறார்கள். அந்த பெயரை பிக்பாஸிடம் இருந்து நான் வாங்கி அவர்கள் உண்மை பெயரையும் சேர்த்து ஒரு போர்டு மாதிரி கையில் கொடுத்துவிட்டு வருவேன்.

அதிலிருந்தாவது அவர்கள் விளையாட்டை மாற்றி விளையாட ஆரம்பிப்பார்கள்’ என்று அமீர் கூறினார். உதாரணமாக மாயாவுக்கு வெளியே ரசிகர்கள் சூனியக்காரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இப்படி பல பெயர்களை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top