More
Categories: latest news

பிக்பாஸ் பாலாஜியை சட்டையை பிடித்து அடித்த பெண் ஆட்டோ டிரைவர்… இந்த கேரக்டருக்கு தேவைதான்!..

BalajiMurugadoss: பிக் பாஸ் தமிழ் சீசன் மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் தற்போது மீண்டும் வைரலாக  பரவி வருகிறார்.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பிரபலங்கள் பல சீசன்களை கடந்தாலும் அவர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அதில் முக்கிய பங்கு பாலாஜி முருகதாஸுக்கு உண்டு. பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசன் கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ்.

Advertising
Advertising

இதையும் படிங்க: துணை முதல்வரான பிறகு உதயநிதிக்கு டெஸ்ட் வச்ச ரோபோ சங்கர்.. அங்கிருந்து வந்த பதில் என்ன தெரியுமா?

அந்த சீசனில் நடிகர் ஆரிக்கு சரியான போட்டியாக அமைந்த பாலாஜிக்கு நெகட்டிவ் விமர்சனங்களை அதிக அளவில் குவிந்தது. இருந்தும் அவருக்கும் வாக்கு அதிகமாக கிடைக்க அவரை பிக் பாஸ் அல்டிமேட்டில் இறக்கியது தயாரிப்பு குழு. பொதுவாக நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்ற போட்டியாளர்கள் அடுத்த முறை வரும்போதும் அதற்கு அதிக அளவில் தான் அவர்கள் பிரச்சனையை சந்திப்பார்கள்.

ஆனால் பாலாஜி விஷயத்தில் இது வித்தியாசமாக அமைந்தது. அல்டிமேட் நிகழ்ச்சியில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம் அந்த சீசனில் வின்னர் டைட்டிலையும் பாலாஜி முருகதாஸ் தட்டிச் சென்றார். இந்நிலையில் நடிகர் பாலாஜி தற்போது சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஃபயர் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: சுந்தர் சி அடுத்த இயக்கப்போவது அரண்மனை 4 இல்லையாம்?!… அடடே இந்த சீரியஸுக்கு தாவிட்டாரே!…

இத்திரைப்படம் நாகர்கோவிலில் காசி என்கிற இளைஞர் நிறைய பெண்களை ஏமாற்றி அவர்களிடம் முறையற்ற நடந்து கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். இதில் பாலாஜி காசியின் கேரக்டரை எடுத்து நடித்திருக்கிறார்.

இப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக பிரிவியூ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் திரைப்படத்தை பார்த்த பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர், கேரக்டரில் காசியாக இருந்த பாலாஜி முருகதாஸ் வசைப்பாடி அவரது சட்டையை பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருந்தும் இது உண்மைதானா அல்லது படத்திற்காக செய்யப்பட்ட பிரமோஷன் என்பது குறித்து ரசிகர்களிடம் கேள்வி எழுந்து வருகிறது.

வீடியோவைக் காண: https://x.com/polimernews/status/1858344773612196178

Published by
Akhilan