Biggboss Tamil 8: அவருக்கு ஒரு ‘குறும்படம்’ போடுங்க… விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் கோரிக்கை!

Published on: November 8, 2024
vijay sethpathi
---Advertisement---

Biggboss Tamil : ஆரம்பத்தில் இந்த பூனையும் பாலை குடிக்குமா? என்ற ரேஞ்சில் இருந்த சவுந்தர்யா தற்போது சவுந்தர்யா 2.O ஆக மாறி அதகளம் செய்து வருகிறார். தன்னுடைய குரலால் இதுவரை பேசாமல் இருந்தாலும் தற்போது எதைக்குறித்தும் கவலை கொள்ளாமல் இறங்கி அடிக்கிறார்.

இப்படியே விளையாடினால் கண்டிப்பாக பைனலுக்கு செல்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜே விஷாலுக்கு இந்த வாரம் ஒரு குறும்படம் போட்டு காட்டுங்கள் என சமூகக் வலைதளத்தில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் எலியும், பூனையுமாக சவுந்தர்யா-விஷால் இருக்கின்றனர். ஒருவரை ஒருவர் எப்போதும் நாமினேட் செய்து கொள்ள தயங்குவது இல்லை. நேரடி நாமினேஷனில் கூட விஷாலை, சவுந்தர்யா நாமினேட் செய்தார். இருவருக்கும் இடையே முட்டல்கள், மோதல்கள் இருந்தாலும் விஷால் செய்வது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

soundarya
#image_title

அதாவது சவுந்தர்யாவின் கேரக்டர் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார். இரண்டு வாரங்களாக அவர் இப்படி செய்தும் விஜய் சேதுபதி இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இதுவே கமலாக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்நேரம் விஷாலுக்கு குறும்படம் போட்டு காட்டியிருப்பார்.

விஜய் சேதுபதி கறாராக இருக்கிறேன் என்ற பேரில் முக்கிய விஷயங்களை தவிர்த்து விடுகிறார் என ஆதங்கத்துடன் விமர்சித்து வருகின்றனர். இந்த வாரமாவது விஜய் சேதுபதி, விஷாலை கண்டிப்பாரா? என்பதை நாம் கண்டிப்பாக பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: அவங்கள பத்தி தெரியுமா உங்களுக்கு?… கடுப்பில் ரசிகர்கள்!