திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி!.. காதலன் மீது ஜூலி பரபரப்பு புகார்....

by சிவா |
julie
X

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினா கடற்கரையில் கோஷம் எழுப்பி புகழடைந்தவர் ஜூலி. இதற்காகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தனது நடவடிக்கைகளால் தனது பெயரை கெடுத்துக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். மேலும், தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வந்தார்.

julie

இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய காதலன் மனிஷ் ஏமாற்றிவிட்டதாகவும், தன்னுடைய பணத்தில் அவருக்கு பல்சர் பைக் வாங்கி கொடுத்ததாகவும், தன்னிடமிருந்து தங்க நகைகளை வாங்கி கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் ஜூலி அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு அளித்துள்ளார். தன்னை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த காதலன் மனுஷுக்கு இதுவரை 2.30 லட்சம் செலவு செய்லடெதிருப்பதாகவும் அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story