நீ அதுக்கு ஒர்த் இல்லமா?.. ஓ சொல்றியா பாட்டுக்கு செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்த ஜூலி...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், தன்னுடைய நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். 4 சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்கள் நிறுத்தவில்லை. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.
சமீபத்தில் தனது காதலன் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில், புஷ்பா படத்தில் ஹிட் அடித்த பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்து வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நீ அதுக்கு ஒர்த் இல்லமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.