Connect with us

Biggboss Tamil 7

பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு விட்ட பொய்..! எக்ஸில் கடுப்பாகி ட்வீட் போட்ட ஹரிஷ் கல்யாண்… தேவையா இந்த அசிங்கம்..!

Vishnu vs Harish Kalyan: பிக்பாஸ் இந்த சீசன் ரொம்பவே டல்லடித்து வரும் நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒருநாள் தங்க வைத்து கண்டெண்ட் எடுக்கலாம் என டீம் போட்ட ப்ளானும் ப்ளாப்பான நிலையில் தற்போது ஒரு சூப்பர் சம்பவம் நடந்து இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவுக்கு எப்போதுமே ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதனால் புது சீசனுக்காக ரசிகர்கள் காத்து இருந்து ஒவ்வொரு நாளையும் பார்க்க ஆவலுடன் இருப்பார்கள். அதைப்போலவே இந்த சீசனுக்கு ப்ரோமோஷன் தொடங்கியதே இரண்டு வீடு என்பது தான்.

இதையும் படிங்க: திடீரென அழைத்த விஜய்… திக்குமுக்காடி போன அட்லீ!.. அவரே அத எதிர்பார்க்கலயாம்!..

இதனால் நிகழ்ச்சிக்குள் இன்னமும் சுவாரஸ்யம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் படுமொக்கையாகி போனது. ஒரு டீம் எல்லா வேலைகளையும் பார்க்க இன்னொரு டீம் ஒன்னுமே செய்யாமல் வாய் பேசியே கண்டெண்ட் கொடுத்தனர். வீக்லி டாஸ்கும் இல்லாமல் மேலும் டல்லடித்தது.

இந்த சீசனில் கமல்ஹாசன், ப்ரதீப் ஆண்டனிக்கு தேவையே இல்லாமல் ஒரு ரெட் கார்ட் கொடுத்து அரசியல் வசனம் பேச பிரச்னை பத்திக்கொண்டது. போட்டியாளர்களை வாரியது இல்லாமல் மீம் கிரியேட்டர்கள் கமலையே கலாய்த்து தள்ளினர்.

இதையும் படிங்க: இத செய்ற வரைக்கும் சும்மா விட மாட்டோம்! ஞானவேல் ராஜாவுக்கு சமுத்திரக்கனி கொடுத்த கடைசி வார்னிங்

ஒருநாள் இரவு தங்கி அவராவது கண்டெண்ட் கொடுப்பார் என எதிர்பார்க்க அவரையே சிலர் கடுப்பேத்தி விட்டனர். இதில் விஷ்ணுவுக்கு அவர் கோல்ட் ஸ்டார் வழங்கி இருந்தார். இதனை அவர் வெளியில் போனதும் ஹரிஷ் என் ப்ரண்ட். அதான் எனக்கு கொடுத்துட்டு போனதாக மணியிடம் பெருமை பேசி இருந்தார்.

 

இந்த வீடியோவை ரசிகர்கள் எடுத்து எக்ஸில் பரப்ப ஹரிஷ் கல்யாணே அந்த ட்வீட்டில் ஷப்பா முடியலைடா என்ற கமெண்ட்டை தட்டி காண்டாகி இருக்கிறார். இன்னும் இந்த சீசன் என்ன காண்டையெல்லாம் சந்திக்க போகுதோ? முடிச்சிவிடுங்க நிலைமையில் தான் இருப்பதால் கிரியேட்டீவ் டீம் என்ன செய்ய போகிறது என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க: இதுதான் லாஸ்ட் ஸ்டேஜ்! கேப்டன் சிகிச்சை குறித்து விளக்கமளித்த மருத்துவர் – இப்படியெல்லாம் இருக்கா?

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top