அப்பா சப்போர்ட்.. கைக்கொடுத்த அமீர்.. சிரிச்சுக்கொண்டே இருக்கும் மணியின் வாழ்க்கையில் இத்தனை கஷ்டமா?

Biggboss Mani: விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சியில் மணியின் நடனத்தை பார்க்க முடியும். அதிலும் சமீப காலமாக அவார்ட் ஷோக்களில் அவர் செய்யும் கலாய் அதிக லைக்ஸ் வாங்கும். அப்படி சிரித்துக்கொண்டே இருக்கும் மணியின் வாழ்க்கையில் அவ்வளவும் கஷ்டம் தானாம்.

மெக்கானிக் வேலை செய்து கொண்டு இருந்த மணியின் அப்பா இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவாராம். தன்னுடைய 3 மகன்களையும் அருகில் இருந்த குழந்தைகளையும் அழைத்து விளையாடுவது அவருக்கு ஒரு வேலையாகவே இருந்ததாம். அப்படி இருக்கும் போது நடனத்தில் அவர்களுக்கு ஈடுபாடு இருக்க அதை சப்போர்ட் செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது! தரமாக தயாராகி வரும் கலக்கல் காமெடி படத்தின் இரண்டாம் பாகம்

சின்ன வயதில் இருந்தே அடிக்கடி நடனம் ஆடும் மணிக்கு நிறைய அப்ளாஸுடன் பணமும் கிடைத்ததால் அவருக்கு தொடர்ந்து நடனம் ஆடவே ஆசை வந்ததாம். அப்போ 11 வது படிக்கும் போது மணிக்கு கூட படிக்கும் பசங்களால் நிறைய தொந்தரவு நடந்து இருக்கிறது. அதேவேளையில் அவர் அம்மாவுடன் பழகியவர்கள் பல லட்சத்தினை தொலைக்க வைத்து விடுகின்றனர்.

கல்லூரியில் படிக்கும் போது மணிக்கு தொல்லையில்லாமல் ஆதரவாக சில நண்பர்கள் இருந்தனர். அப்போது மானாட மயிலாட நிகழ்ச்சியில் மணி ஆடும் போது அவருக்கு அமீருடன் பழக்கம் கிடைக்கிறது. முதல் எலிமினேஷன் அமீர் மற்றும் இரண்டாம் எலிமினேஷன் மணி ஆகி உள்ளனர்.

இதையும் படிங்க... ஸ்ரீவித்யா ஒன்னும் யாரும் இல்லாம சாகல!.. உண்மை தெரியாம பேசாதீங்க!.. பொங்கும் உறவினர்…

ஆனால் பெங்களூரில் இருந்த மணிக்கு சென்னையில் இருக்க வருமானம் இல்ல. அதனால் தன்னுடைய நண்பர்களுடன் காலையில் அன்ரிசர்வ் ரயிலில் வந்திறங்கி ஸ்டேஷனிலேயே குளித்து செட்டுக்கு வருவாராம். அங்கு கொடுத்த ரூமில் தங்கி போடும் சாப்பாடை சாப்பிட்டு விட்டு நைட் மீண்டும் டிரெயினில் கிளம்பிவிடுவாராம். இப்படி கஷ்டப்பட்டது 6 மாதம்.

கடைசியில் அந்த சீசன் வின்னரானார். அப்படி போராட்டத்துடன் தொடங்கிய மணிக்கு வின்னர் பெரிய அங்கீகாரத்தினை கொடுத்தது. இன்று விஜய் டிவியில் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்து இருக்கிறார். மணிக்கு பிக்பாஸில் இரண்டாம் இடம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..

 

Related Articles

Next Story