ஆடைகளை பார்த்து அள்ளி அணைத்து கொண்ட பிக்பாஸ் மணிகண்டன்! - வைரலாகும் ஷாப்பிங் வீடியோ!..
தமிழ் சினிமாவில் நடிகராக சில படங்களிலும் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் வலம் வந்தவர் மணிகண்டன்.
இவர் இவருடைய மனைவி சோபியாவும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் கலந்து கொண்டதைத் தொடர்ந்து மணிகண்டன் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல சோபியா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஷாப்பிங் சென்றுள்ளார்.
சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். கடைக்கும் சென்றதும் கலெக்ஷன்களை பார்த்து வியந்த மணிகண்டன் லண்டனிலிருந்து வந்து ஷாப்பிங் செய்பவர்களை பார்த்து வியந்துள்ளார். அதன் பிறகு மனைவியுடன் ஷாப்பிங் புடவைகள் ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நைட்டிகளின் கலெக்ஷனை பார்த்ததும் மணிகண்டன் ஓடிச்சென்று அள்ளி அணைத்துக் கொண்டுள்ளார்.
அவருடைய மனைவி மணிகண்டனை நைட்டி ரசிகன் என கலாய்த்துள்ளார். இவர்களுக்கு இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.