
Biggboss Tamil 5
நமீதா மாரிமுத்துக்கு இந்த நோயா?…! என்னடா இப்படி பீதிய கிளப்புறீங்க?…
மாடலும், நடிகையுமானவர் நமீதா மாரிமுத்து. இவர் ஒரு திருநங்கை ஆவார். நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்தவர். இவர் சமூக ஆர்வலரும் கூட. கொரோனா லாக்டவுன் நேரத்தில் நிறைய சமுக சேவைகளையும் செய்துள்ளார்.மேலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள இவர் மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இண்டர்நேஷனல் 2020 விருதையும் பெற்றுள்ளார்.
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் அவர் கலந்து கொண்டுள்ளார். தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் பற்றி அவர் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சக போட்டியாளர்களிடம் கூறியது பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது. எனவே, அவருக்கு ஆதரவும் பெருகியது. ஆனால், திடீரென அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாக செய்திகள் வெளியானது. இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
சொந்த காரணங்களால் அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின் அவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.
இந்நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை தனிமைப்படுத்தவும் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளார்.
அதேநேரம், போட்டியாளர்கள் தனிமை படுத்தப்பட்டால் நிகழ்ச்சி எப்படி தொடர்ந்து நடத்தப்பட்டு ஒளிபரப்பாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.