அந்த மாதிரியான உடைதான் போடனும்...! பிக்பாஸ் பிரபலத்தை நிர்பந்தபடுத்திய பிரபல தொலைக்காட்சி...
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 5 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட் பிளஸில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது முயற்சியை எடுத்து அதிலும் வெற்றி கண்டனர்.
அந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் பாதியில் இருந்து தொகுத்து வழங்கியவர் நடிகர் சிம்பு. மேலும் அந்த நிகழ்ச்சி சூடுபிடித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அவர்களுக்காகவே மற்றுமொரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறது விஜய் டிவி. அதுதான் பிக்பாஸ் ஜோடிகள் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சி.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். அதிலும் போட்டியாளர் தாமரை சற்று வித்தியாசமான ஆடையில் வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்துக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் எனக்கு சேலை தான் வேண்டும், சுடிதார் ஷாலுடன் தான் வேண்டும் என அடம்பிடித்து வாங்குவாராம்.
ஆனால் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஐக்கி பெர்ரிக்கு இணையாக கலக்கி கொண்டிருக்கிறார். இதையறிந்த பிக்பாஸ் காஸ்டியூம் டிசைனர் தாமரையிடம் வீட்டிற்குள் மட்டும் இதுதான் வேண்டும் என என்னிடம் அடம் பிடித்தீர்கள். இங்கு மொத்தமாக மாடர்னாகவே மாறிவிட்டீர்கள் என கேட்டதற்கு “ பாப்பா, இந்த நிகழ்ச்சியில் இப்படிதான் போட வேண்டும் என சொல்கிறார்கள். இப்படி போட்டதான் நன்றாக இருக்கும் என கூறுகிறார்கள்” என கூறியதாக தெரிகிறது.