கலைகட்டபோகுது பிக்பாஸ் சீசன் 6....! தொகுத்து வழங்கப் போவது யாருனு தெரியுமா..?
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 5 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட் பிளஸில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது முயற்சியை எடுத்து அதிலும் வெற்றி கண்டனர்.
அதே உத்வேகத்துடன் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வெற்றி கண்டார். இந்த நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த உலகநாயகன் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் நிலையிலும் பிக்பாஸ் சீசன் 6 யை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என பயம் எல்லோருக்கும் இருந்தது.
வாரத்திற்கு இரண்டு நாள்கள் வரும் அவர் அந்த இரண்டு நாள்களுமே பிஸியாக தான் இருப்பார் என தெரிகிறது. சீசன் 6 ஐ யார் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமலும் சிம்புவுமே சேர்ந்து நடத்த போவதாக தெரிகிறது. எந்த மாதிரியான செடியூலில் வர போகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இந்த செய்திதான் இப்பொழுது வைரலாகி வருகிறது.