வீட்ட ரெண்டாக்குறதுதான் வேலையே! ரெண்டு வீடா இருந்தா? புதிய திருப்பங்களுடன் பிக்பாஸ் சீசன் 7 - லிஸ்ட் ரெடி
வந்து விட்டது பிக்பாஸ் சீசன் 7. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்களிடையே ஒரு தனி இடத்தை பெற்று திகழ்கிறது. உலகம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
6 சீசன்களை கடந்து இப்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை அதே வீடு, அதே கன்ஃபஷன் அறை, அதே டாஸ்க் என இருந்து வந்த நிலையில் இந்த சீசனில் புதிய புதிய திருப்பங்கள் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க : இவருக்காக தன் கொள்கையே மாற்றிய ரஜினிகாந்த்! பாலசந்தரை விட இவர் ஒசத்தியா?
அதுவும் பிக்பாஸ் புரோமோ வெளியானதில் இருந்து என்னடா இது? எப்படி சமாளிப்பார் கமல் என்று சொல்லாதவர்கள் இல்லை. ஆம். அந்த புரோமோவில் கமலே கூறியிருப்பார். இந்த முறை ஒரு வீடு இல்லை .இரண்டு வீடு என்று.
ஆக ஒரே வீடாக இருந்த பிக்பாஸ் வீட்டை இந்த சீசனில் இரண்டு வீடாக பிரித்து டாஸ்க் செய்ய காத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ஆவலும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இதையும் படிங்க : ‘லியோ’வில் ரோலக்ஸா? புதைந்திருந்த ரகசியத்தை கசியவிட்ட த்ரிஷா! அப்போ lcu கன்ஃபார்ம்
அந்த வகையில் பிரபல தொகுப்பாளார் மா.கா.பா.ஆனந்த், டிவி நடிகை ரட்சிதா கணவர், மற்றொமொரு தொகுப்பாளினி ஜாக்குலின், பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்கநாதன், நடிகர் ப்ரித்விராஜ், கோவை மாநகர பெண் ஓட்டினர் சர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் போன்ற பெயர்கள் அடிபடுகின்றன.
இவர்களோடு பிரபல நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதுவும் அவர் சொந்த மாமாவை திருமணம் செய்ய இருப்பதால் திருமண வாழ்க்கைக்கு போவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம்.