Connect with us

Biggboss Tamil 7

பிக்பாஸில் இரண்டாகும் வீடு… கடுப்பில் 6 போட்டியாளர்கள்… தெறிக்கவிடும் ப்ரோமோ.. ஆரம்பமே அதிரடி!

BiggBossTamil Season7: இந்த சீசன் பிக்பாஸை ஹிட் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த குழு ரொம்பவே மெனக்கெட்டு சில விஷயங்களை செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த சீசனின் முதல் நாளே ப்ரோமோக்களே அதிரடியாக களமிறங்கி இருக்கிறது.

எப்போ பா பிக்பாஸ் தொடங்கும் என பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 7வது சீசன் பிக்பாஸ் தொடங்கிவிட்டது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் இந்த சீசனில் மணிசந்திரா, ப்ரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா, பவா செல்லத்துரை, விசித்ரா, யுகேந்திரன், நிக்சன், விஜய் வர்மா, பூர்ணிமா, அனன்யா, ஐசு, ஜோவிகா, கூல் சுரேஷ், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், அக்‌ஷயா என போட்டியாளர்கள் லிஸ்டே எதிர்பார்ப்பை எகிற வைத்தது. 

இதையும் படிங்க: வெற்றிமாறனின் அடுத்த 7 படங்கள்!. தரமான சம்பவம் பண்ண காத்திருக்கும் தளபதி விஜய்…

இந்நிலையில், எப்போதும் போல இல்லாமல் இந்த சீசன் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இருப்பதை முன்கூட்டியே அறிவித்தனர். ஆண், பெண் எனப் பிரிப்பார்களோ இல்லை ஏழை, பணக்கார வீடு எனப் பிரிப்பார்களோ என பல கேள்விகள் எழுந்தது. ஆனால் அதில் பிக்பாஸ் டீம் ஒரு ட்விஸ்ட் வைத்தது.

கேப்டனாக கடைசி போட்டியாளராக உள்ளே வந்த விஜய் வர்மா சத்தமே இல்லாமல் கேப்டனாக பதவிக்கு வந்தார். அவரை கவராத வினுஷா, ரவீனா, ஐஸு, அனன்யா, பவா செல்லத்துரை, நிக்‌ஷனை தேர்ந்தெடுத்து குட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோப்படி, அந்த வீட்டில் இருக்கும் 6 போட்டியாளர்கள் தான் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு உணவை சமைத்து கொடுக்க வேண்டும். அவர்கள் தான் பாத்ரூம், வீட்டு க்ளினீங் வேலைகளை செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: அடேய் இதுக்கு தானா அது… இரண்டாவது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 போட்டியாளர்கள்…

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top