வைரல் நடிகர் முதல் விபரீத ஸ்டார் வரை…கண்டெண்ட்களால் கலைக்கட்ட போகும் பிக்பாஸ் சீசன் 7…

by Akhilan |
வைரல் நடிகர் முதல் விபரீத ஸ்டார் வரை…கண்டெண்ட்களால் கலைக்கட்ட போகும் பிக்பாஸ் சீசன் 7…
X

Biggboss season Tamil: பிக்பாஸ் தமிழின் 7வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் சிலர் குறித்த முக்கிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதில் முக்கிய மூன்று பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதை கேட்ட ரசிகர்கள் அட செமடா இனி கலைக்கட்டும் என்கின்றனர்.

பல முன்னணி நட்சத்திரங்களை ஒரே வீட்டில் 60க்கும் அதிகமான கேமரா முன்னிலையில் 100 நாட்களுக்கு மேலாக வாழ வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் வரை பரிசாக கொடுக்கப்படும். பல மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்ச்சி தமிழில் 7வது சீசனை எட்டி இருக்கிறது.

இதையும் படிங்க: ‘அயலான்’ படத்தில் இவங்களும் இருக்காங்களா? 23 வருஷம் கழிச்சு ரீஎண்ட்ரியில் கலக்க வரும் விஜய் பட நடிகை

இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பது தற்போதே உறுதியாகி இருக்கிறது. பாண்டியஸ் ஸ்டோரிஸ் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிராக நடிக்கும் குமரன் இதில் நடிக்க இருக்கிறார்.

அந்த தொடர் முடிய இருக்கிறதால், கண்டிப்பாக குமரன் எண்ட்ரி இருக்கும் என நம்பப்படுகிறது. அடுத்து ஆபிஸ் தொடரில் நடித்த விஷ்ணு நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. ஆயிஷாவுடனான காதல் சர்ச்சைக்கு பின்னர் விஷ்ணுவின் இந்த எண்ட்ரி மேலும் டிஆர்பியை அதிகரிக்கும் என்கின்றனர்.

விஜய் ஜோடி நிகழ்ச்சியில் சிம்புவையே அழுக விட்ட ப்ரித்விராஜ் சமீபத்தில் தான் 23 வயது ஷீத்தலுடன் காதலில் சிக்கினார். அவர் இந்த நிகழ்ச்சியில் வந்தால் டான்ஸும் இருக்கும். கண்டெண்ட்டும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், பிகில் படத்தில் நடித்த ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, மௌன ராகம் சீரியல் ரவீணா ஆகியோரும் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லியோ கதை இப்படித்தான் இருக்கும்!.. போஸ்டர்களிலேயே பொடி வைத்த லோகேஷ் கனகராஜ்.. செம தில்லுதான்!..

இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் பல ஆச்சரியங்களை எதிர்பார்த்தும் பலரும் செம ஆவலுடன் வெயிட் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட எல்லா போட்டியாளர்களும் உறுதியாகி விட்ட நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவர்களின் ஒவ்வொரு தகவல்களும் இணையத்தில் சூடாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story