இந்த பாலிடிக்ஸால் வெளியேற்றப்பட்டேன்… பிக்பாஸில் ஓட்டே கிடையாது… அதிரடி காட்டும் ஸ்ருதிகா அர்ஜூன்
Shrutika Arjun: ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18ல் விளையாடி கடைசியில் அதிர்ச்சியாக எலிமினேட் செய்யப்பட்ட ஸ்ருதிகா அர்ஜூன் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நான்கு திரைப்படங்கள் வரை நடித்தவர் ஸ்ருதிஹா அர்ஜுன். இவர் பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேட்டி என்றாலும் அவர் நடித்த நான்கு படங்களுமே மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து அவர் தன்னுடைய படிப்புக்கு கவனிக்க நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தார்.
இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் விஜய் டிவியின் மூலம் ரீ எண்ட்ரியானார். துறுதுறு பேச்சும், கலகலப்பான நடவடிக்கையும் ஸ்ருதிகா மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் உருவாக்கியது. தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வின் செய்தார்.
பின்னர் யூட்யூப் சேனல் மூலம் தொடர்ச்சியாக வைரலாக இருந்த ஸ்ருதிகா அர்ஜூன் திடீரென பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். இவரால் அந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடிக்க முடியுமா என பலரும் சந்தேகம் கொண்டனர். ஏனெனில் முதல் நாள் எபிசோடில் சல்மான்கானின் செல்லமாக கொஞ்சினார்.
தொடர்ந்து தன்னுடைய போட்டியாளர்களிடம் நான் நான்கு படங்களில் நடித்து அத்தனையும் தோல்வியானது என ஓப்பனாக உடைத்தார். தமிழ் பிக் பாஸ் போல இல்லாமல் ஹிந்தி பிக் பாஸ் கொஞ்சம் காட்டமாக தான் நடந்து கொள்வார்கள்.
அப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இவரால் எப்படி தாக்கு பிடிக்க முடியும். ஆனால் தான் தன்னை காத்துக் கொள்ள முடியும் என்பதை ஸ்ருதிகா அர்ஜுன் ஆச்சரியமாக வெளிப்படுத்தினார். அந்த போட்டியின் பிரபல போட்டியாளர்களிடம் நேருக்கு நேராக தேவைப்பட்ட நேரங்களில் அவர் சண்டை போட்டது பலரை ஆச்சரியம் அடைய வைத்தது.
தொடர்ந்து முன்னேறிக்கொண்டே சென்றவர் ஃபைனலுக்கு முந்திய வாரத்தில் மிட் வீக் எவிக்ஷனினில் வெளியேற்றப்பட்டார். இது குறித்து தற்போது அவர் பேசுகையில், என்னை சல்மான் சார் வருவதற்கு ஒரு நாள் முன்பாக எலிமினேட் செய்தார்கள்.
அதற்கு காரணமாக ஓட்டு என்று அவர்கள் குறிப்பிட்டாலும் அது என்னை மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என்னுடைய கணவர் முதல் 40 நாட்களில் உன்னை சுற்றி ப்ரோமோக்கள் இருந்தது என்றார். பின்னர் தான் தெரிந்தது பைனலில் இருந்த ஐவரில் மூவர் கலர்ஸ் தொலைக்காட்சியின் பிரபல முகங்கள்.
மேலும், ஸ்ருதிகா என்னிடம் சல்மான்கான் சார் எப்போதுமே சப்போர்ட்டாக தான் இருந்தார். 14 வாரங்களில் என்னை அவர் திட்டியதே இல்லை. எனக்கு அவர் தேவையான ஆறுதலை நிகழ்ச்சியில் கொடுத்தார். அவர் ஒரு ஜெண்டில்மேன் என்றார்.
பிக்பாஸ் தெலுங்கில் கலந்துக்கொண்டு முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டார் ஷகீலா. அவர் தான் ஸ்ருதிகாவை இந்த பேட்டியில் பேட்டி கண்டார் என்பதால் பிக்பாஸில் ஓட்டெல்லாம் உண்மையே இல்லை என்றும் காட்டமாக சொல்லி இருந்தார்.