More
Categories: latest news television

Biggboss 8: பிக்பாஸ் சவுந்தர்யாவின் 17 லட்சம் ஸ்கேம்.. பிரச்சினை எங்கு ஆரம்பிச்சது தெரியுமா?

Biggboss 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஏழு சீசன்களாக மக்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசன் போரடிப்பதாகவே தெரிகிறது.

வார இறுதியில் வரும் விஜய்சேதுபதி கூட சில நேரங்களில் டென்ஷனாகி விடுவதையும் பார்க்கம் முடிகிறது. என்ன இருந்தாலும் 100 நாள்கள் எப்படியாவது பார்த்துதான் ஆக வேண்டும். இந்த நிலையில் பிக்பாஸில் கதை சொல்லும் டாஸ்க் நடந்தது. அப்போது சௌந்தர்யா அவருடைய 17 லட்சம் ஸ்கேம் பற்றி கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு டிவிட்டரில் ஓட்டு சேகரிப்பதற்காகவே சௌந்தர்யா ஒரு சிம்பதியை கிரியேட் செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் சில பேர் கூறி வந்தார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: Thuglife: ஒரு ரிலீஸ் தேதிக்கு இவ்வளவு அக்கப்போரா!… கடைசில ஆண்டவரையும் இப்படி மாத்திட்டீங்களேப்பா?!…

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு விமர்சகர் போலீஸ் அறிக்கையுடன் கூறியிருக்கிறார். இந்த வருடம் மார்ச் மாதம் சௌந்தர்யா அவர் தோழிகள் நான்கு பேருடன் சிம்லா சென்றாராம். திரும்பும் வழியில் அவருடைய மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டிருக்கிறார். டிரெயினில்தான் சிம்லா போயிருக்கிறார்.

டிரெயில் சார்ஜ் போடும் வசதி ஜன்னல் ஓரமாகத்தான் இருக்கும். அப்படி போடும் போது அவருடைய மொபைல் போனை முகம் தெரியாத நபர் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாராம். உடனே டெல்லியில் போன் காணாமல் போய்விட்டது என போலீஸில் புகாரும் கொடுத்திருக்கிறார். இங்கு தான் அவருக்கு பிரச்சினையே ஆரம்பித்திருக்கிறது.

இருந்தாலும் அதே மாதிரியான ஒரு டூப்ளிகேட் நம்பரையும் சௌந்தர்யா வாங்கிவிட்டாராம். ஒரு நாள் சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் வந்திருக்கிறது. அதில் பம்பாயில் இருந்து ஒரு போலீஸ் பேசுவது போல் மாறுவேடம் அணிந்து பேசியிருக்கிறார்கள். அப்போது சிம்லாவில் இருந்து சைனாவுக்கு சட்டவிரோதமாக உங்க மொபைல் போனில் இருந்து சில தகவல்கள் போயிருக்கிறது என கேட்டிருக்கிறார்கள்.

soundarya

இதையும் படிங்க: Amaran: அமரன் படத்துக்கு எதிராக வெடித்த போராட்டம்… திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு..

உடனே சௌந்தர்யா தன் போன் காணாமல் போன விஷயத்தை சொல்லியிருக்கிறார். சரி ஆதார் நம்பரை சொல்லுங்கள் என அந்த நபர் கேட்டிருக்கிறார். உடனே சௌந்தர்யா ‘சரி போலீஸ்தானே கேட்கிறார்’என நினைத்து ஆதார் நம்பரை சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் கடகடவென இவருடைய அக்கவுண்டிலிருந்து 17 லட்சத்தை சுருட்டிவிட்டார்களாம். இது சம்பந்தமாக கமிஷனர் வரை புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆரும் போட்டாச்சு. ஆக மொத்தம் சௌந்தர்யா சொன்னது சிம்பதி இல்லை. உண்மையிலேயே ஏமாந்துதான் போனார் என சமூக வலைதளத்தில் இது சம்பந்தமான தகவல் வெளியாகி கொண்டு வருகிறது.

Published by
Rohini