கப்பை எடுத்து வைங்கப்பா… உள்ளே வரும் முன்னாள் சர்ச்சை பிரபலம்… பிக்பாஸ்8 பரபர அப்டேட்…

Published on: September 14, 2024
---Advertisement---

Biggboss Tamil8: தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் பரபரப்பாக நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதன் போட்டியாளர் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது. தற்போது வரும் உத்தேச பட்டியலில் முக்கிய பிரபலம் ஒருவர் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தியில் பல சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி முதல்முறையாக தமிழுக்கு வந்த போது எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சியை  தொகுத்து வழங்க கமல்ஹாசன் வந்ததே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதையும் படிங்க: ஆத்தாடி…பிபி7 முடிஞ்சும் இந்த டீம் ஏ, டீம் பி அடிச்சிக்கிறத நிறுத்தலையா… இன்னொரு பஞ்சாயத்தா?

தொடர்ச்சியாக நிகழ்ச்சியின் வெற்றிக்கு கமல் அதிகம் பாடுபட்டு இருந்தார் என்றே கூறலாம். அவரின் தக் லைஃப் வசனங்கள் நிகழ்ச்சிக்கு அதிக பரபரப்பை பற்ற வைத்தது. இதனால் ஒவ்வொரு சீசன்களுக்குமே கமலின் புரோமோகளுக்கு அதிக முக்கியத்துவம் ரசிகர்களிடம் இருக்கும். இந்த வருட சீசன் தொடங்கப்பட இருக்கும் சில தினங்களில் நான் இந்த சீசன் பிக்பாஸில் இல்லை என கமல் அறிவித்தார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக அவர் நடிப்பால் வித்தியாசம் காட்டுபவர் என்பதால் இந்த சீசனுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிற்து. அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்வார்கள் எனக் கேள்வி எழுந்துள்ளது.

அதில் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா மற்றும் ஹீரோ அர்னவ், சின்னத்திரை நடிகர் அருண் பிரசாத், பாக்கியலட்சுமி நடிகை அக்‌ஷிதா ஆகியோர் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த சீசனை மேலும் ரசிகர்களிடம் வெற்றி பெற செய்ய கடந்த சீசன்களின் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களை உள்ளே இறக்கலாம் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இதையும் படிங்க: வேட்டையனில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. சீக்ரெட்டை உடைத்த மஞ்சு வாரியர்… ஜாலி பண்ணும் ரசிகர்கள்

Pradeep Antony

இந்நிலையில் தான் பிரதீப் ஆண்டனி இந்த சீசனில் உள்ளே வர இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. ஆனால் அவர் உள்ளே வந்தால் ரசிகர்களிடம் இருக்கும் பெரிய ஆதரவால் நிச்சயம் பைனல் வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும் என்பதால் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.