அரசு சொன்னதைக் காற்றில்விட்ட விஜய் டிவி… சிக்கலில் விஜய் சேதுபதி… தேவையா?
Biggboss Tamil8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறது. இது குறித்து தொடர்ச்சியாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை குறித்து வருகிறது. விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்குள் வந்தபோது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அதை போட்டியாளர்கள் தேர்வு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு அஜீத் ஆதரவு… சிம்பாலிக்கா சொல்லி தெறிக்க விட்டுட்டாரே…!
தொடர்ந்து வீட்டை இரண்டாக பிரித்தது. மொக்கையான டாஸ்குகள் என பிக் பாஸ் தமிழ் தன்னுடைய ரசிகர்களை தொடர்ச்சியாக இழந்து வந்தது. மேலும் வாராவாரம் விஜய் சேதுபதி போட்டியாளர்களை கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் மிரட்டி அவர்களை அசிங்கப்படுத்துவதும் பிரச்சனையாக மாறியது.
இதனால் பிக் பாஸ் தமிழ் தன்னுடைய அக்மார்க் ரசிகர்களை இழந்து தற்போது டிஆர்பியில் தடுமாறி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த புயல் சனிக்கிழமை ஆன நேற்று (நவம்பர் 30) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என தமிழக அரசு அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதையும் படிங்க: Biggboss Tamil8: தக் லைஃப்னு கடுப்பாக்கும் விஜய் சேதுபதி… இந்த போட்டியாளார் மீது வன்மத்தை கொட்டுறாரே!..
ஆனால் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுகளுக்கான சென்னை அருகே நசரத்பேட்டை இவிஎம் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. காலையிலிருந்து நடத்தப்பட்ட இந்த ஷூட்டிங்கில் சாமானிய மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு அத்தகைய கோரிக்கையை பிடித்திருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இப்படி ஒரு படப்பிடிப்பில் அவர்களை கலந்து கொள்ள வைத்தது அவசியம் என்ன? அரசின் கோரிக்கையை பிக் பாஸ் டீம் மற்றும் விஜய் சேதுபதி ஏன் நிராகரித்தனர் என தற்போது கேள்வி எழுந்து வருகிறது.