Biggboss tamil 8: போட்டியாளராக களமிறங்கும் வெளிநாட்டு நடிகை?

Published on: September 10, 2024
---Advertisement---

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வருகின்ற அக்டோபர் மாதம் 13-ம் தேதி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கமல் முதன்முறையாக இதில் இருந்து விலகி இருப்பதால் இந்த சீசனின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இதுவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் தொடங்கி பாரதி கண்ணம்மா அருண் வரை ஏகப்பட்ட நட்சத்திரங்கள் என்ட்ரி இருக்கும் என்பது தெரிகிறது.

 

அதோடு கமல் இடத்தை நிரப்ப விஜய் சேதுபதியும் முயற்சி செய்வார் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. இந்த நிலையில் வெளிநாட்டு கோட்டாவில் இந்த வருடம் மலேசிய நடிகை மூன் நிலா கலந்து கொள்ளலாம் என புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

லாஸ்லியா தொடங்கி வருடம்தோறும் யாராவது ஒரு பிரபலம் வெளிநாட்டு பிரிவில் பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த வருடம் மூன் நிலா என்ட்ரி அளிக்க இருக்கிறார்.

இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இறைவி திருமகள் காடு என்னும் சீரியலில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் மூன் நிலா போட்டியாளராக கலந்து கொள்வது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடங்கள் போல இல்லாமல் வெயிட்டாக பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்.

இருக்கு நமக்கு எண்டர்டெயின்மென்ட் இருக்கு…

manju

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.