பிக்பாஸ் வின்னர் ஓகே… டாப் 8 சீசன் ரன்னர் லிஸ்ட் நியாபகம் இருக்கா? இத நோட் பண்ணுங்க…
Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வின்னர்கள் மட்டுமே நியாபகத்தில் இருக்கும் நிலையில், ரன்னர் அப்பை சிலர் மறந்து இருக்கலாம். அதை மீண்டும் நியாபகப்படுத்த தான் இந்த தொகுப்பு.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி எட்டு சீசன்களை கடந்து இருக்கிறது. முதல் ஏழு சீசன்கள் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ் பிக்பாஸின் எட்டாவது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். கமல்ஹாசன் ஸ்டைல் ஒரு வகை என்றால் விஜய் சேதுபதி ஒரு ஸ்டைலில் செய்தார்.
இதில் இந்த சீசன் கப்பை முத்துகுமரன் தட்டி செல்ல இரண்டாம் இடத்தினை சவுந்தர்யா பெற்றார். நிகழ்ச்சியில் சவுந்தர்யா பெரிய அளவு கன்டெண்ட் கொடுக்கவில்லை. மேலும் பிஆர் வைத்திருந்ததாகவும் சவுந்தர்யா மீது நிகழ்ச்சிக்குள் இருந்த எல்லா போட்டியாளர்களும் விமர்சனத்தை குவித்தனர்.
தொடர்ச்சியாக, வின்னர்கள் லிஸ்ட் எல்லாருக்கும் இன்றளவும் நியாபகம் இருக்கிறது. ஆனால் ரன்னர்கள் லிஸ்ட்டை பலரும் மறந்துவிட்டு இருக்கலாம். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பாடலாசிரியர் சினேகன் ரன்னராக மாறினார். இவர் முதல் சீசனில் பெரிய அளவில் நாமினேஷனில் வரவில்லை. அதனால் அவருக்கு கடைசியில் ஓட்டு கிடைக்கவில்லை.
இரண்டாவது சீசனில் முரட்டுத்தனமாக விளையாடிய ஐஸ்வர்யா தத்தா ரன்னராக மாறினார். போட்டிகளில் மாஸ் காட்டி விளையாடினாலும் அவருக்கு இருந்த நெகட்டிவ் இமேஜே கெடுத்தது. தொடர்ந்து பணப்பெட்டியை வின்னர் அமவுண்ட்டில் இருந்து எடுத்தால் வேண்டாம் எனக் கூறி வரவேற்பு பெற்றார்.
மூன்றாவது சீசனில் அதிக வரவேற்பு பெற்ற சாண்டி மாஸ்டர் ரன்னராக வந்தார். நான்காவது சீசனில் பாலாஜி முருகதாஸ் நெகட்டிவ் விமர்சனத்தால் டைட்டில் ஜஸ்டில் மிஸ் செய்தார். ஐந்தாவது சீசனில் விஜய் டிவியின் ப்ராடக்ட் தான் பிரியங்கா. இன்னொரு விஜய் பிராடக்ட்டுடான ராஜூவிடம் டைட்டிலை தவறவிட்டு ரன்னராக மாறினார்.
ஆறாவது சீசனில் அசீமிடம் போட்டி போட்டு விக்ரமன் ரன்னர் அப்பாக வந்தார். அதை தொடர்ந்து ஏழாவது சீசனில் மிகப்பெரிய பிரச்னை நிலவியது. டைட்டிலை தட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்பை வெளியேற்றினர். தொடர்ந்து மாயா மற்றும் அர்ச்சனாவுக்கு போட்டி நடந்தது.
ரன்னர் அப்பாக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மாயா மூன்றாம் இடம் மட்டுமே பிடித்தார். இரண்டாம் இடம் மணிசந்திராவுக்கு கிடைத்தது. இப்படி எட்டு சீசன்களிலும் ரன்னர் அப் லிஸ்ட் வித்தியாசமாக அமைந்தது.