Biggboss Tamil: பிக்பாஸ் போட்டியாளருக்கு 'அடித்த' அதிர்ஷ்டம்... என்னன்னு நீங்களே பாருங்க!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஓரளவு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்தநிலையில் கடந்த சீசன் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்ற அர்ச்சனா புதிய படமொன்றில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்!
சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அர்ச்சனா நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வெளியான டிமாண்டி காலனி 2 படத்தில் ஒரு சிறிய வேடமொன்றில் அர்ச்சனா நடித்து இருந்தார். தற்போது மிகப்பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. படம் குறித்து இன்னும் பெரியளவில் தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் அர்ச்சனாவிற்கு கிடைத்த இந்த வாய்ப்பு அவரது தீவிர ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் போட்டிபோட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சீரியல் நடிகர் அருண், அர்ச்சனாவை காதலிப்பதை அறிவித்து விட்டார். வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இருவருக்கும் திருமணம் என்றும் சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்திற்கு அர்ச்சனா செல்லவிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினிமாவில் சாதித்த போட்டியாளர்களாக கவின், ஆரவ் இருக்கின்றனர். தற்போது அந்த லிஸ்டில் அர்ச்சனாவும் இணைகிறார். அவரும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?