Biggboss Tamil 8: காதல் கசந்துர போகுது... போட்டியாளருக்கு எச்சரிக்கை!

by சிவா |
biggboss
X

#image_title

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 46 நாட்களை கடந்து விட்டது. தற்போது வீட்டில் ராஜா-ராணி டாஸ்க் கொடுத்துள்ளனர். இதில் சாச்சனா ராணியாக நடித்து வருகிறார். (வேற ஆளே கெடைக்கலயா பிக்பாஸ்) பிற போட்டியாளர்கள் மந்திரி, சேவகன் உள்ளிட்ட வேடங்களை செய்து வருகின்றனர். பணிப்பெண்ணாக சவுந்தர்யா இருக்கிறார். (என்ன கொடுமை இது)

50-வது நாளில் இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்து, வீட்டுக்குள் அனுப்பிட பிக்பாஸ் முடிவு செய்துள்ளாராம். இதனால் ஆட்டம் மேலும் சூடுபிடிக்கும் என பிக்பாஸ் நினைத்துள்ளார். அவர் நினைப்பில் மண் விழாமல் இருந்தால் சரி.

இதையும் படிங்க: குழந்தை இருக்கிறது பிக்பாஸ் போனப்ப தெரியலயா?!. கஸ்தூரிக்கு எதிராக பொங்கும் நெட்டிசன்கள்!…

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் விஜே விஷால் -தர்ஷிகா காதல் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. பெண்களை மோசமாக கேலி, கிண்டல் செய்த விஷாலுடன் தர்ஷிகா போன்ற ஒரு போட்டியாளர் எப்படி காதல் வசப்பட்டார் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். ஒருவேளை இதுவும் பிக்பாஸ் டாஸ்க்கா என்பது தெரியவில்லை.

dhansika

#image_title

ரசிகர்கள் மத்தியில் தர்ஷிகாவிற்கு கணிசமான ஆதரவு உள்ளது. முயன்றால் டைட்டில் வின்னராகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அதை விட்டுவிட்டு விஷாலுடன் காதல் பயிரை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவர் பிக்பாஸ் விளையாட்டிலும் கவனம் செலுத்துவதில்லை. அவரின் இந்த காதல் வீட்டில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கும் காரணமாக இருக்கலாம்.

இதுவரை பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்களில் அமீர்-பாவனி மட்டும் தான் திருமணம் வரை சென்றுள்ளனர். அவர்களும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷால்-தர்ஷிகா காதல் எப்படி சென்று முடியப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் ‘வைல்டு கார்டு’ போட்டியாளர்? .. சூடு பிடிக்குமா?!..

Next Story